கி.பி. 571 ம் ஆண்டு மக்கா நகரில் பிறந்த முஹம்மது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனது நாற்பது வயதில் இறைச் செய்திகளை பெறத் தொடங்கிய பிறகு உருவமற்ற ஒரு இறைவனையே வணங்கவேண்டும் பிரச்சாரம் செய்தார்கள். ஆண்டாண்டு காலமாய் சிலை வணக்கத்தில் முழ்கிப் போய் பூம்யில் கட்டப்பட்ட முதல் இறையில்லமான கஃபாவிலேயே சிலைகளை வைத்து வழிப் பட்டுக் கொண்டு அதன் மூலம் தங்களை உயர்ந்த இனமாக அடையாளப் படுத்திக் கொண்டிருந்த குறைஷிக் குடும்பத்தினர் முஹம்மது (ஸல்) அவர்களை ஏற்றுக்கொள்ளவில்லை.
மக்காவில் அவரும் அவரது தோழர்களும் நியாயமற்ற சொல்லனா துயரங்களுக்கும் அடக்கு முறைகளுக்கும் ஆளானானார்கள். கடுமையான சமூக ஒதுக்குதலுக்கு உட்படுத்தப் பட்டார்கள். அதன் காரணமாக அவர்களது துணைவியார் அன்னை கதீஜாவின் திரளான சொத்துக்கள் காலியாயின. பல தோழர்கள் கடும் சித்தர்வதைக்கு ஆளானார்கள். சிலர் அந்தச் சித்திரவதைகளில் தம் இன்னுயிரை இழந்தார்கள். பக்கத்திலிருந்த வேறு ஏதாவது ஊரில் அடைக்கலாம கோரலாம் என்றால் மக்காவி குறைஷியர் அதற்கும் இடையூறு செய்தார்கள் விதித்தார்கள். எந்தக் குற்றமும் செய்யாத நிலையில் இஸ்லாமை தழுவிய ஒரு காரணத்திற்காக இந்தக் கொடுகைக்கு அவர்கள் ஆளாக்கப் பட்டார்கள். எந்த வகையிலிம் பதிலடி தருவதற்கு முஹம்மது (ஸல்) முஸ்லிம்களுக்கு அனுமதி அளிக்கவுமில்லை. பொறுமை பொறுமை என்பதே அவரது தாரக மந்திரமாக இருந்தது, எதுவரை பொறுமையாக காப்பது? என்று உணர்ச்சிவசப்பட்ட தோழர்களைப் பார்த்து முஹம்மது (ஸல்); “ நீங்கள் அவசர ப் படுகிறீர்கள். உங்களது தலை இருபுச் சீப்பால் வாரப்படலாம். அப்போதும் பொறுமையாக இருங்கள். ஒரு நல்ல காலம் பிறக்கும் அப்போது அரபு தீபகற்பம் முழுதும் அக்கிரமம் ஒழிந்து அமைதி தவழும் அது வரை பொறுமையாக இருங்கள் என்றார்கள். தோழர்கள் அடக்கு முறைகளை சகித்துக் கொண்டார்கள். எல்லவகையான இழப்புகளுக்கும் சம்மதித்தார்கள். மக்காவிலுர்ந்து வெளியேறுவதற்காக பல தோழர்களும் தங்களது வீடு, வாசல், தொழில் நிறுவனங்கள், சேர்த்து வைத்த சொத்துக்கள் அத்தனையையும் மக்கா குறைஷிகளிடம் கொடுத்து பிறகே வெளியேற முடிந்தது.
முஸ்லிம்களுக்கு மதீனாவில் ஒரு வசதியான தளம் அமைந்தது. மதீனா இஸ்லாமிய நகராக உருவாகியிருந்தது.மக்காவின் குறைஷிகள் முஹம்மது ஸல்) அவர்களை நிராகரித்த போது மதீனா நகரத்து பிரபலங்கள் பலர் மக்காவிற்கே வந்து அவரை ஏற்றனர். தங்களது ஊரில் அவரை வரவேற்கத் தயாராயினர்.
தலைவர்கள் முதலில் தன்னைக் காப்பாற்றிக் கொள்வது இன்றைய அரசியலின் இயல்பு. ஆனால் மதீனாவில் தனக்கு ஒரு வசதியன தளம் இருக்கிறது என்பதை அறிந்து கொண்ட பிறகும் கூட முஹம்மது (ஸல்) அவர்கள் உடனடியாக மக்காவை விட்டு வெளியேறி விடவில்லை, தோழர்களை முதலில் அனுப்பி வைத்தார். இறுதியில் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்ட போது மக்கா நகரிலிருந்து வெளியேறி மதீனாவில் குடியேறினார்.
அங்கு வசதியான இடம் கிடைத்தது என்ற போதும் ஒரு கொள்கையை ஏறுக்கொண்டதற்காக மக்காவின் மக்கள் மதீனாவில் அகதிகளாக வசதி வாய்ப்புக்களை இழந்து குடும்பத்தினரைப் பிரிந்து வாழ்வது நபிகள் நாயகத்திற்கு கவலையளிப்பதாகவே இருந்தது. அல்லாஹ் அந்தக் கவலைக்கு ஒரு தீர்வு சொன்னான.
அதுவரை திருப்பித்தாக்குவதற்கு தடை செய்யப் பட்டிருந்த முஸ்லிம்கள் இனி தங்களது தாக்குதலை தொடங்கலாம் என்று அனுமதி யளித்தான், திருக்குரானின் அந்த உத்திரவு இப்படி அமைந்தது. அதி அற்புதமாக சொல்லப் பட்ட உத்திரவு அது
யுத்தம் செய்யும் நிர்பந்தத்திற்கு ஆளானோருக்கு எதிர்த்து போராட அனுமதிக்கப் படுகிறது. அவர்களுக்கு அநீதி இழைக்கப் பட்டிருக்கிறது. தங்களது வீடுகளை விட்டு அவர்கள் வெளியேற்றப் பட்டிருக்கிறார்கள். அல்லாஹ் அவர்களுக்கு உதவி செய்ய ஆற்றலுடையவன்
இந்த வசனத்திற்குப் பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவரளின் அரசியல் நடவ்டிக்கைகள் தீவிரம்டைந்தன. நமது பொருட்களை அபகரித்தவர்களுக்கு நாம் ஒரு பாடம் புகட்ட வேண்டும் என பெருமானார் நினைத்தார்கள்.
அப்போதுதான் தான் பெருமானார் (ஸல்) அவர்களுக்கு ஒரு செய்தி கிடைத்தது. மக்காவிலிருந்து 43 வியாபாரிகளைக் கொண்ட பெரும் வியாபாரக் கூட்டமொன்றூ அபூசுப்யானுடைய தலைமையில் சிர்யாவுக்கு புறப்படுகிறது என்ற செய்தி கிடைத்தது.அந்த வியாபாரத்தில் மக்காவின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் பங்கிருந்தது.
மக்காவிலிருந்து சிரியாவுக்கு செல்வதானால் மதீனாவை கடந்து தான் செல்ல வேண்டும். செங்கடலை ஒட்டு ஒரு பாதை இருந்தது அது தொலைவு அதிகம், எனவே மதீனா வழியாக கடந்து செல்லும் மக்காவின் வியாபரக் கூட்டத்தை கைப்பற்றி அவர்களுக்கு ஒரு எச்சரிக்கை கொடுக்க முஹ்மமது (ஸல்) அவர்கள் திட்டமிட்டார்கள்.
சில குழுக்களை அனுப்பி வியாபாரம் கூட்டம் குறித்து விசாரிக்க அனுப்பினார்கள். நபித்தோழர் அப்துல்லாஹ் பின் ஜஹ்ஸ் தலைமயில் சென்ற ஒரு குழு மக்காவின் வெறு ஒரு சிறு வியாபாரக் கூட்டத்தை சந்தித்தது. அவர்களிடையே நடைபெற்ற மோதலில் அம்ரு பின் ஹழ்ரமீ என்ற மக்கா காரர் கொல்லப் பட்டார். ஆனால் அபூசுபயானுடைய வியாபாரக் கூட்டம் குறித்த தகவல் எதுவும் கிடைக்கவில்லை.
பெருமானார் (ஸல்) அவர்கள் தானே தேடிச் செல்வது என்று முடிவு செய்தார்கள். தோழர்களை திரட்டினார்கள். அது ஒரு திட்டமிட்ட திரட்டுதலும் இல்லை. வருவோர் வரலாம் என்று அழைத்தார்கள். புறப்படுகிற போது எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது கூட கணக்கிடப் படவில்லை. இடைவழியில் ஆட்களை எண்ணும்படி பெருமானார் உத்தரவிட்டார்கள். ஒருவர் எண்ணிப் பார்த்து விட்டு 313 பேர் இருக்கிறார்கள் என்றார். நபிகள் நாயகம் (ஸல்) அந்த எண்ணிக்கையை கேட்டு மகிழ்ச்சிய்டைந்தார்கள். முற்காலத்தில் ஒரு முறை தங்களது தலைவருக்கு முழுமையாக கட்டுப்பட்டு நடந்து கொண்ட யூதர்க்குழுவினர் 313 பேர் இருந்ததனர் என்பதால் அந்த எண்ணிக்கை பெருமானாருக்கு மகிழ்சியளித்தது.
இதற்குள் சிரியா சென்று சேர்ந்து விட்ட அபூசுப்யானுக்கு நபிகள் நாயகத்தின் திட்டம் தெரிய வந்தது, அவர் ழம்ழம் என்ற ஒரு நபரை கூலிக்கு அமர்த்தி மக்கா குறைஷியரின் வியாபாரக் கூட்டத்திற்கு முஹம்மதால் ஆபத்து என்ற செய்தியை சொல்லுமாறு அனுப்பி வைத்தார்.
ஏற்கென்வே ஒரு கொலையால் கோபம் கொண்டிருந்த மக்காவிற்குள் இந்தச் செய்தி பெரும் புயலை உண்டு பண்ணியது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அழித்து விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொட்டிருத பிரதான எதிரி அபூஜஹ்ல் வெறித்தனமாக மக்காவின் ஆட்களை திரட்டினான். 100 குதிரைகள் ஆயிரம் காலாட்ப்டையினரோடு அவன் படை எடுத்து புறப்பட்டன். ஆட்டம் பாட்டத்தோடு அவனது படை மதீனாவை நோக்கி நகர்ந்தது.
அபூசுப்யானின் வியாபாரக் கூட்டத்தை எதிர்பார்த்து மக்காவின் பாதையில் பயணம் செய்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சுமார் 80 மைல்கள் பயணம் செய்து பத்ரு கிணறு இருக்கிற பகுதிக்கு வந்து சேர்ந்தார்கள். அபூஜஹ்லின் படை அதன் இன்னொரு முனையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது.
ஒரு இடையன் கொடுத்த தகவலால் மக்காவின் குறைஷிகள் படை எடுத்து வந்திருபதை அறிந்து கொண்ட பெருமானார் தோழர்களோடு ஆலோசனை செய்தார்கள். வியாபாரக் கூட்டத்தை சாதாரணமாக பிடித்து விடலாம் என்ற மனக் கோட்டையில் இருந்த தோழர்களுக்கு இந்தச் செய்தி அதிர்ச்சியாகத்தான் இருந்தது. ஆயினும் தான் புறப்பட்ட போது அல்லாஹ் ஒன்றூ வியாபாரக் கூட்டம் அல்லது வெற்றியை தருவதாக அல்லாஹ் வாக்களித்த திருக்குரானிய வசனத்தை எடுத்துக் கூறிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு களத்தில் எதிரிகளை நேருக்கு நேர் சந்தித்த பிறகு அவர்களை எதிர் கொள்வதையே தான் விரும்புவதாக குறிப்பிட்டார்கள். எந்த வகையான முன்னேற்பாட்டுக்கும் தயாராக இல்லாத நிலையிலும் கூட நபிகள் நாயகத்தின் தோழர்கள் அந்த முடிவுக்கு தங்களது பரிபூரண சம்மதத்தை வெளிப்படுத்தினார்கள்.
அதன் பிறகு யுத்ததிற்கான ஆயத்ததில் இறங்கிய தோழர்களை வரிசைப் படுத்தினார்கள். அது ஒரு வியாழக் கிழமையின் மாலை நேரம். இரு தரப்பாரும் ஒருவர் மற்றவர் வருகைப் பற்றி அறிந்து சண்டைக்கு தயாராக இருந்த சூழலில் வெள்ளிக்கிழமை பொழுது புலர்ந்தது.
மக்காவில் சந்தித்த இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு முஹம்மது (ஸல்) அவரகள் தன்னுடன் மக்காவிலிருந்து வந்த சுமார் நூறு பேருடனும் மதீனாவின் தோழர்கள் சுமார் இருநூறு பேர்களுடனும் அபூஜஹ்லின் தலைமையிலான எதிரணியினரைச் நேருக்கு நேர் சந்தித்தார்கள், முஸ்லிம்களின் அணியில் ஒரு ஒருங்கிணைப்பு ஒழுங்கும் இருந்தது, எதிரணியில் அது இல்லை,
யுத்தம் தொடங்கியது.முதலில் தனி நபர்கள் மோதினாரர்கள்.அது கொடுத்த ஆக்ரோஷத்தில் பிறகு அணியாக மோதினார்கள். காலையில் தொடங்கிய யுத்தம் லுஹர் நேரத்திற்குள்ளாக முடிந்து போனது.
முஸ்லிம்கள் வெற்றிய்டைந்தனர். எதிரிகள் தோற்றனர். முஸ்லிம்களது தரப்பில் 14 பேரும் எதிரிகளின் தரப்பில் எழுபது பேரும் கொல்லப்பட்டிருந்தனர். எதிரிகளில் 74 பேர் சிறை பிடிக்கப்பட்டவரகள் போக மற்றவர்கள் யுத்த களத்திலிருந்து விரண்டோடினர். எதிரிகளின் தலைவர்கள் அத்தனை பேரும் கொல்ல்பபட்டிருதனர்.
313 நபர்களை மட்டுமே கொண்ட அனுபவமும் ஆயுதங்களும் அற்ற சிறு படையினர் இறை விசுவசம் தலைமைக்கு கட்டுப்படுதல் என்ற ஒரு அம்சத்தை ,மட்டுமே கொண்டு அவர்களை விட வலிமையான போர்த்திறன் அதிக எண்ணிக்கையினரை வெற்றி கொண்டது ஒரு வரலாற்று அதிசயம்.
நன்றி :-சமநிலை சமுதாயம் 

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
நாளைய தேசம் © 2013. All Rights Reserved. Design by naalaiyathesham
Top