அரசியல் என்பது
இன்று ஆபாசமாய் விட்டது.
அதில் அரசாங்கம் ஓரு மாயக் கலை
இந்தக் கலையின் கருத்தோடுதான்
ஆட்சி பீடம் அமர்வார்கள்.
மக்களை அடக்கியாள்வார்கள்.
இதனால் மக்கள்
நீண்ட உறக்கத்தில்
உறைந்து விடுவார்கள்.

அதனால்
எந்தச் சமுதாயத்தையும்
அடக்கியாள முடியாது.
காலத்தின் வேகத்தில்
கருத்துக்கள் மாறும்.
உறக்கத்தில் உள்ளவர்கள்
உணர்ச்சி பெற்று விடுவார்கள்.
அப்போது அங்கே
புரட்சிப் பூக்கள் பூக்கும்.

மக்களாட்சி முறை என்று
ஏமாற்ற முடியாது.
ஏனென்றால்,
மக்களாட்சி முறை என்பது
புதியதல்ல.
எனினும்,மக்களாட்சி என்ற
திரைக்குப் பின் அடக்குமுறை
ஆட்சிதான் நடக்கிறது.
உரிமைகள் உத்திரவாதங்கள்
சலுகைகள், சீர்திருத்தங்கள்
எல்லாம் மக்களை
அயர்ச்சியில் ஆழ்த்தும்
துôக்க மாத்திரைகள்
.
உழைப்பவர்களுக்கு உகந்த 
ஊதியம் இல்லை.
நாளை, நற்காலம் மலரும் என்ற
மனப்பான்மையுடன் உழைப்பாளி “
உழன்றுக்கொண்டிருகிறான்.

அவனது நம்பிக்கை,அவனது முயற்சி
அவனது இலட்சியத்தை
அழித்து விட முடியாது.
இது, நீலநெடுவானுக்கும் அப்பால்
நிலைப் பெற்றிருக்கும் உண்மை
முஸ்லிமின் இலட்சியம்

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
நாளைய தேசம் © 2013. All Rights Reserved. Design by naalaiyathesham
Top