கண்டி கடிகார கோபுரம் இலங்கை தலதா வீதி, பண்டாரநாயக்க  மாவத்தை மற்றும் சிறைச்சாலை  மாவத்தை சந்தித்துக்கொள்ளும் கண்டி மையத்தில் அமைந்துள்ளது. நகரின் ஒரு அடையாளமான  கடிகார கோபுரம் ஒரு நினைவுச்சின்னம் ஆகும்  1947ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ம் நாள் கடுகண்ணாவையில்  ஒரு விபத்தில் தனது உயிரை இழந்த தனது  மகன் முகமது ஸக்கி  இஸ்மாயில், 1947 நினைவாக ஹாஜி முஹம்மது இஸ்மாயில் அவர்களால்  1950 ல் இஸ்மாயில் கட்டிடம் அருகில் கட்டப்பட்டது.

இஸ்மாயில் பிரிட்டிஷ் கார் இறக்குமதியாளரான ரவ்லாண்ட்ஸ் லிமிட்டெட் முகவர் ஆவார்.14 ஆகஸ்ட் 1947 அன்று இஸ்மாயில் மகன்,மருமகன் மற்றொரு ஊழியர்சகிதம்  கொழும்பிலிருந்து  கண்டி திரும்பி வந்து கொண்டிருக்கும்போது கடும்மழையினால் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக  கீழே சறுக்கி விடப்பட்ட  ஒரு பாறாங்கல் கீழ் நசுக்கப்பட்டு கொல்லப்பட்டனர் (இன்னா லிள்ளஹி வாஇன்னா இலைஹி ரஜியூன் ).இவ் விபத்துச் செய்தி  அடுத்த நாள் இஸ்மாயில் ஹாஜி அவர்களுக்கு போலீசாரால்   அறிவிக்கப்பட்டது. 
இவர்களது நினைவாக மக்களுக்கு பயனுறும் விதமாக ஏதாவது நற்காரியம் ஒன்றினை மேற்கொள்ள இஸ்மாயில் ஹாஜியார் எண்ணினார். அதன் விளைவாக இலங்கையின் முன்னணி கட்டடகலைஞரான ஷெர்லி டி அல்விஸ் அவர்களிடம் வழங்கப்பட்டு 1950ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்  14ம் நாள் கடிகார கோபுர கட்டட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டது.
இயந்திரங்கள் மற்றும் தேவையான உபகரணங்கள் ஐக்கிய ராஜ்யம் இருந்து கொண்டுவரப்பட்டு கண்டிய கலை அம்சங்களை பிரதிபலிக்கும் தலதா மாளிகை மற்றும்   கண்டி அரச அரண்மனை வாடிவமைப்புகளுடன் 1950ம் ஆண்டு டிசம்பர் மதம் 23ம் நாள் கட்டிமுடிக்கப்பட்ட  கண்டிய மணிக்கூட்டுக் கோபுரம் 1951ம் ஆண்டு அன்றைய பிரதமர் கெளரவ டி.எஸ் .சேனாநாயக்க அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

0 comments:

Post a Comment

 
நாளைய தேசம் © 2013. All Rights Reserved. Design by naalaiyathesham
Top