பிறப்பு : 1955, செப்டம்பர் 3 ஆம் திகதி, கனேமுல்லவில் உள்ள விவசாயக் குடும்பத்தில் பிறந்தார்.
ஆரம்பக்கல்வி : பொலன்னறுவ தோபா வெவ கல்லூரி, பொலன்னறுவ ரோயல் கல்லூரி.
உயர்கல்வி : ரஷ்யா மார்க்சிம் கோர்க்கி கல்விக் கழகத்தில் அரசியல் அறிவியல் டிப்ளோமா பட்டம்
அரசியல் ஈடுபாடு : பாடசாலை பருவத்தில் இடதுசாரி கொள்கைகளில் ஈடுபாடு
குடும்பம் : மனைவி ஜெயந்தி புஷ்பகுமார, 3 பிள்ளைகள்
அரசியல் பிரவேசம் : 17 வயதில் பொலன்னறுவ ஸ்ரீல.சு.க. இளைஞர் அமைப்பு செயலாளர்.
சிறைவாசம் 1971 ஜே.வி.பி. கிளர்ச்சியின் போது மட்டு சிறையில் அடைப்பு
முழுநேர அரசியல் : 1978 இல் சு.க. வில் முழுநேர அரசியலில் குதிப்பு
அமைப்பாளர் : 1982 இல் பொலன்னறுவை சு.க. அமைப் பாளராக நியமிப்பு
பாராளுமன்றம் தெரிவு : 1989இல் முதற்தடவையாக பாராளுமன்றம் தெரிவு.
பிரதி அமைச்சர் : 1994 தேர்தலில் அதிகூடிய வாக்குகள் பெற்று தெரிவாகி நீர்ப்பாசன பிரதி அமைச்சராக நியமிப்பு
அமைச்சர் : 1997 இல் அமைச்சரவை மாற்றத்துடன் மகாவலி அபிவிருத்தி அமைச்சராக நியமிப்பு
கட்சி செயலாளர் : 2001ஆம் ஆண்டில் சு.க. செயலாளராக நியமிப்பு
அமைச்சு பதவிகள் : நாடாளுமன்ற விவகார அமைச்சர், ரஜரட்ட அபிவிருத்தி அமைச்சர், விவசாய அமைச்சர், சுகாதார அமைச்சர்
சபை முதல்வர் : 2004 இல் சபை முதல்வராக நியமிப்பு
குண்டுத்தாக்குதல் : 2008 அக்டோபர் 9 இல் பிலியந்தலையில் தற்கொலை குண்டுத்தாக்குதலில் உயிர்தப்பல்
அரசிலிருந்து விலகல் : 2014 நவம்பர் 21 இல் ஐ.ம.சு.மு.வில் இருந்து விலகி பொது வேட்பாளராக போட்டி
ஜனாதிபதியாக தெரிவு : 2015 ஜனவரி 9 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலில் 7 ஆவது ஜனாதிபதியாக தெரிவு
சாதனைகளில் சில துளிகள் : விவசாய அமைச்சராக விவசாயிகளுக்கு 350 ரூபா பசளை நிவாரணம் வழங்க பங்களிபபு
மொரகஹகந்த களுகங்கை, வலவ நீர்ப்பாசன திட்டங்கள் ஆரம்பிப்பு 2000 ஆம் ஆண்டில் நெல் சந்தைப்படுத்தல் சபை மூடும் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பு உத்தரவாத விலைக்கு நெல் கொள்வனவு செய்தல் பயிரிடுவோம் நாட்டை காப்போம் திட்டத்தினூடாக உள்நாட்டு உணவு உற்பத்தியை மேம்படுத்த நடவடிக்கை எடுத்தல் புகை, மதுசாரத்திலிருந்து நாட்டை மீட்கும் போராட்டத்திற்கு உலக சுகாதார ஸ்தாபனம் ஹவார்ட் பல்கலைக்கழகம் என்பன 2013ல் விருது.
சிகரட் பெட்டியில் 80 வீதம் அறிவுறுத்தல்படம் பிரசுரிக்க நடவடிக்கை எடுத்தமை சேனக பிபில ஊடாக கொள்கையை செயற்படுத்த முன்வரல் சு.க.தலைமையிலான ஐ.மு.சு.மு.வின் வெற்றிக்கு பங்களிப்பு 2004 இல் சு.க. ஜே.வி.பி ஒப்பந்தம், 2006 இல் பயங்கரவாதத்தை தோற்கடிக்க சு.க. - ஐ.தே.க ஒப்பந்தம் என்பவற்றில் கைச்சாத்து

0 comments:

Post a Comment

 
நாளைய தேசம் © 2013. All Rights Reserved. Design by naalaiyathesham
Top