
நாடு ஐரோப்பாவின் நுழைவு வாயில் என்றழைக்கப்படும் ஸ்பெயின் நாட்டிற்கு விஸிகோத் பரம்பரையின் ரோட்ரிக்ஸ் மன்னராக இருந்தான். கொடுங்கோலனான ரோட்ரிக்ஸ் ஆட்சியில் மக்கள் அடிமைப்பட்டுக்கிடந்தனர். செல்வந்தர்களும் மதகுருமார்களும் ஏழை எளிய மக்களை சுரண்டிச் செல்வச் செழிப்புடன் வாழ்ந்தனர். அதற்கான வரிச் சுமைகளால் மக்கள் வாடி வதங்கினர். சமூகக் கொடுமைகள் மற்றும் பெண்ணடிமைத்தனம் மலிந்திருந்தது.
ஸ்பெயினில் வாழ்ந்த யூதர்கள் கடும் வேதனையை அனுபவித்தனர். அட்டூழியம் பெருகவே பல யூதர்கள் ஸ்பெயினை விட்டு வெளியேறி இஸ்லாமிய ஆட்சியில் தஞ்சம் புகுந்து இஸ்லாமிய கிலாபத்தின் வட ஆப்ரிக்க கவர்னர் மூஸா பின் நுஸைர் அவர்களிடம் காப்பாற்றுமாறு முறையிட்டு
இக் காலகட்டத்தில் மொரோக்கோவிற்கும் ஐரோப்பாவின் ஸ்பெயினிற்கும் இடைப்பட்ட பகுதியில் ரோமப் பேரரசின் கீழ் இருந்த சியோட்டாவின் கவர்னராக ஜுதார்.
ஜுலியனின் மகள் ஃப்ளோரின்டா சட்டக்கல்வி பயிலுவதற்காகவும் நீதிமன்ற நடவடிக்கைகளைப் பார்வையிடுவதற்காகவும் ஸ்பெயின் நாட்டிலுள்ள டோலேடோ நகருக்கு சென்று வருவது வழக்கம். ரோட்ரிக்ஸ் மன்னன் ஒருநாள் சென்ற அவளை கடத்திச் சென்று துஷ்பிரயோகம் செய்து விடுகிறான்.
தந்தை ஜுலியன் நேராகச் சென்று ரோட்ரிக்ஸிடம் நீதி கேட்கிறார். நீதி மறுக்கப்பட்டு
அலட்சியப்படுத்தப்படுகிறது ஸ்பெயினில் அவமானப்படுத்தப்பட்ட ஜுலியன் ரோமப் பேரரசின் தலைமையிடத்தில் முறையிடுகிறார் அங்கும் அவருக்கு நீதி கிடைக்கவில்லை. மாறாக மன்னன் ரோட்ரிக்ஸின் அடக்குமுறைகள் சியோட்டாவில் அதிகரிக்கத் தொடங்கின. விரக்தியின் பின் ஜுலியன் மற்றும் ரோட்ரிக்ஸின் எதிர்பாளிகளுடன் இணைந்து இஸ்லாமியப் பேரரசின் வடஆப்ரிக்க கவர்னர் மூஸா பின் நுஸைர் அவர்களிடம் ஸ்பெயின் மன்னன் ரோட்ரிக்ஸின் அட்டூழியத்திற்கு முடிவு கட்டுமாறும் தனக்கு நீதி பெற்றுத் தருமாறும் கோரிக்கை வைத்தனர்.
இந்தக் கோரிக்கை இஸ்லாமியப் பேரரசின் தலைமை பீடம் அமைந்திருந்த சிரியாவில் “அமீருல் மூஃமினீன் வலீத் இப்னு அப்துல் மாலிக்கிடம் வைக்கப்படுகிறது. உமையா கலீஃபா வலீத் அவர்கள் முதலில் ஸ்பெயின் மன்னன் ரோட்ரிக்ஸின் இராணுவ வலிமை அதன் உறுதிநிலை குறித்து உளவு சேகரிக்குமாறு உத்தரவிடுகிறார். உடனடியாக களத்தில் இறங்கிய வட ஆப்ரிக்கா கவர்னர் மூஸா இப்னு நுஸைர் அவர்கள் அந்தப் பொறுப்பு முழுவதையும் தனது நம்பிக்கைக்குரிய தளபதி தாரிக் பின் ஸியாத் அவர்களிடம் ஒப்படைக்கிறார்.
வடஆப்ரிக்காவில் இருந்த இஸ்லாமிய இராணுவத்தில் உளவுத் துறையின் தலைவர் தஃரிப் என்ற தளபதியை தேர்வு செய்து அவரின் கீழ் நன்றாக பயிற்றுவிக்கப்பட்ட, எதற்கும் அஞ்சாத 400 கமாண்டோக்களை முதல் நிலை வீரர்களாகத் தேர்வு செய்து ஸ்பெயினின் வஸிகோத் மன்னன் ரோட்ரிக்ஸின் இராணுவ வலிமையை உளவு பார்த்திட பணிக்கிறார் .
ரோமப் பேரரசின் முத்திரை பதிக்கப்பட்ட ஜுலியனின் கடற்படை கப்பல்களில் இஸ்லாமிய இராணுவத்தின் உளவுப் பிரிவு கமாண்டோக்கள் புறப்பட்டனர். சில மாதங்கள் மற்றும் ஜிப்ரால்டர் மலை அதன் கடற்பகுதி முழுவதும் சுற்றிப் பார்த்து வஸிகோத் மன்னனின் இராணுவ வலிமை, அவை நிலைநிறுத்தப்பட்டுள்ள இடங்கள் அவர்களின் உணவு, பழக்க வழக்கங்கள் அனைத்தையும் முழுவதுமாகத் தெரிந்து வந்து கவர்னர் மூஸா இப்னு நுஸைர் அவர்களிடம் அறிக்கை கொடுக்கின்றனர்.
இஸ்லாமிய உளவுப் பிரிவு கமாண்டோக்களின் உளவு அறிக்கையின் கலீஃபா வலீத் இப்னு அப்துல் மாலிக்கின் பார்வைக்குச் செல்கிறது. உளவு அறிக்கையின் அடிப்படையில் ஸ்பெயின் விஸிகோத் மன்னன் ரோட்ரிக்ஸ் மீது இராணுவ நடவடிக்கை மிக நுணுக்கமாக திட்டமிடப்படுகிறது. பொறுப்பு வீரத்தளபதி தாரிக் பின் ஸியாத் அவர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. இஸ்லாமியப் பேரரசின் இராணுவம் போர்ப் பயிற்சியில் ஈடுபடுகிறது.
முழு இராணுவத்திலுமிருந்து தகுதிமிக்க வீரர்கள் ஏழாயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டு
இஸ்லாமிய இராணுவம் வீரத் தளபதி தாரிக் பின் ஸியாத் தலைமையில் சியோட்டோ கவர்னர் ஜுலியனின் கடற்படைக் கப்பலிலேயே ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி கி.பி. 711 “அல்லாஹ் அக்பர்” என்று உயிரின் உயிரான முழக்கத்தை ஓங்கி ஓங்கி ஒலித்தபடி அல்லாஹ்வுக்காக அல்லாஹ்வுடைய தீனிற்காக உயிர்த் தியாகம் செய்திட புறப்பட்டனர்.
இஸ்லாமிய இராணுவம் 14 கடல் மைல்கள் இரவில் பயணம் செய்து ஒரு மலைக்குன்றை அடைந்தது. அந்த மலையில் ஒரு சில நாட்கள் தங்கி புதிய நிலப்பரப்பிற்கு ஏற்ப தங்கள் போர்த்திறனை புதுப்பித்துக் கொள்கின்றனர்.
தளபதி தாரிக் தலைமையிலான இஸ்லாமிய இராணுவம் அந்தமலையில் தங்கியதால் தளபதி தாரிக்கின் பெயராலேயே அந்த மலைக்குன்று அன்று முதல் “ஜபல் அல்தாரிக்’’ என்று அழைக்கப்பட்டது. அது பிற்காலத்தில் மறுவி ஜிப்ரால்டர் என்றாகிப் போய்விட்டது. இஸ்லாமிய இராணுவம் ஸ்பெயினை அடைந்துவிட்ட செய்தி விஸிகோத் மன்னன் ரோட்ரிக்ஸிக்கு சென்றவுடன் ஸ்பெயின், போர்ச்சுகல் உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த ஒரு இலட்சம் வீரர்களைத் திரட்டி இஸ்லாமிய இராணுவத்தை எதிர்க்கொள்ளத் தயாராக நின்றான். விஸிகோத் மன்னனின் ஒரு இலட்சம் இராணுவ வீரர்கள் அணிவகுத்து நின்றதையும் மறுபுறம் தனக்குப் பின்னால் வெறும் ஏழாயிரம் இஸ்லாமிய இராணுவத்தினர் அணிவகுத்து நிற்பதையும் பார்த்த வீரத் தளபதி தாரிக் இப்னு ஸியாத் அவர்கள் ஒரு உத்தரவு போடுகிறார்.
மொரோக்கோவிலிருந்து தாங்கள் பயணித்து வந்த கப்பல்கள் அனைத்தையும் தீயிட்டுக் கொளுத்துமாறு உத்தரவிடுகிறார். கப்பல்கள் அனைத்தும் கொளுத்தப்பட்டன. அப்போது இஸ்லாமிய இராணுவத்தின் ஏழாயிரம் வீரர்களுக்கு முன்பாக உரை கம்பீரமாக வீரத் தளபதி தாரிக் ஆற்றுகிறார் .
ஸ்பெயின் கேடிலேட் ஆற்றங்கரை ஓரத்தில் போர் துவங்கியது. இஸ்லாமிய இராணுவ வீரர்களுக்கு உதவிட வட ஆப்ரிக்காவில் இருந்து மேலும் ஐந்தாயிரம் வீரர்கள் வந்து சேர்ந்தனர்
முஃமின்களுக்கு அல்லாஹ்வின் உதவிகள் வந்து சேரும் என்ற அல்லாஹ்வின் வாக்கு மீண்டும் நிருபணமானது. விஸிகோத் மன்னனின் படைகள் வாங்கி ஓடினர். “அல்லாஹு அக்பர்” என்ற அனல் தெறிக்கும் முழக்கம் அவர்களைச் சிதறடித்து சின்னாபின்னமாக்கியது.
சியோட்டாவின் கவர்னர் ஜுலியன் தனது அமைச்சர்களையும் அறிஞர்களையும் ஸ்பெயினிற்கு அனுப்பி முஸ்லிம்கள் ஸ்பெயினை ஆக்கிரமிக்க வரவில்லை கொடுங்கோலன் ரோட்ரிக்ஸின் அட்டூழியத்தை அடக்கவே வந்துள்ளனர். மேலும் அவர்கள் இறைத்தூதுச் செய்தியை தாங்கி வந்துள்ளனர். அமைதியை நிலைநிறுத்தி அனைத்து தரப்பு மக்களுக்கும் சுதந்திரம் அளிக்கவே வந்துள்ளனர். அவர்களை நாம் வரவேற்கவேண்டும். அவர்களின் ஆட்சியில் நீதி நிலைநிறுத்தப்படும் என்று ஸ்பெயின் மக்களுக்கு விளக்கம் அளிக்கச் செய்தார். உண்மை நிலையை புரிந்து கொண்ட ஸ்பெயின் மக்கள் போரில் முஸ்லிம்களுக்கு ஆதரவு அளித்தனர். தங்களது படை வீரர்களையும் பின் வாங்கச் செய்தனர். போர் ஓய்ந்தது. விஸிக்கோத் மன்னன் ரோட்ரிக்ஸ் கொல்லப்பட்டான். போரில் இஸ்லாமிய சட்டதிட்டங்களை நிலைநிறுத்திய இஸ்லாமிய இராணுவம் வெற்றி பெற்றது. மக்கள் மனமகிழ்ச்சியோடு முஸ்லிம்களை வரவேற்றனர்.
போரில் முஸ்லிம்கள் தரப்பில் மூவாயிரம் வீரர்கள் ஷஹீதானார்கள். பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்து என்பது ஆண்டுகளில் இஸ்லாமிய மார்க்கம் ஐரோப்பாவின் நுழைவு வாயிலான ஸ்பெயினில் நிலைபெற்றது. அடுத்த 800 ஆண்டுகள் இஸ்லாமிக் ஸ்பெயின் அதாவது “அல்-அந்தலூஸிய்யா” உலகின் உன்னதமான நாடாக உருமாறியது. கி.பி.711இல் வீரத்தளபதி தாரிக் பின் ஜியாத் அவர்களின் ஈமானிய உறுதியும் நிலைகுலையாத வீரமும் ஸ்பெயினில் இஸ்லாமிய ஆட்சியை மலரச் செய்தது. அடுத்தடுத்த நூற்றாண்டுகளில் இஸ்லாமிய மார்க்கத்தின் அனைத்துக் கலைகளும் ஆழமாக மிக மிக நேர்த்தியாக உலகமே வியக்கும் வண்ணம் செழித்து வளர்ந்தன. மக்கள் ஆனந்தம் அடைந்தனர். அல்-அந்தலூஸிய்யா அறிவின் நுழைவிடமாக, அறிவியல் ஆய்வுகளின் பிறப்பிடமாக, உயரிய நாகரீகத்தின் தலைமை பீடமாக விளங்கியது. பள்ளிவாசல்களும் மதரஸாக்களும் அரண்மனைகளும் நிரம்பி இருந்தன. மத்திய கால உலக வரலாற்றின் பெரும் பங்கு இஸ்லாமிக் ஸ்பெயின் என்ற அல்-அந்தலூஸிய்யாவைச் சுற்றியே பதிவு செய்யப்பட்டுள்ளது.
பல நூற்றாண்டுகள் கழிந்தன .12 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு முஸ்லிம்களிடம் குழுச் சண்டைகளும் கோஷ்டி மோதல்களும் அதிகரித்தன. பதவிக்காக ஒருவரை ஒருவர் தாக்கி தங்களைத் தாங்களே அழித்துக் கொண்டனர். சமயம் பார்த்து கிறித்துவ உலகம் ஒன்று சேர்ந்து தொடர்ச்சியாக சிலுவை யுத்தங்கள் நடத்தி முஸ்லிம்களை கொன்று குவித்து, மதமாற்றம் செய்து நாட்டைவிட்டு வெளியேற்றியது.
இறுதியாக கி.பி.1492.ல் ஸ்பெயினில் ஒரு முஸ்லிம் கூட இல்லை என்ற நிலை உருவானது. அல்லாஹ்வை வணங்குவதற்கு ஒரு இறை இல்லம் கூட இல்லாமலும் அல்லாஹ்வின் வார்த்தைகளை உச்சரிப்பதற்கு ஒரு முஸ்லிம் கூட இல்லாமலும் முற்றிலுமாக ஸ்பெயினிலிருந்து துடைத்து எறியப்பட்டனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.