ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

லீடைபெற்று முடிந்துள்ள பொதுத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் இலங்கையின் 7 ஆவது ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அதன் படி பிரதான வேட்பாளர்களாக போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ஷ 47.58% வீத வாக்குகளைப் பெற்றுள்ளதோடு அவரை எதிர்த்து போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன 51.28% வீதமான வாக்குகளைப் பெற்றுள்ளார்.
அதன் அடிப்படையில் இத் தேர்தலில் 4,49,072 வாக்குகள் வித்தியாசத்தில் மைத்திரிபால சிறிசேன வெற்றியீட்டியதாக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய பிரகடனப்படுத்தியுள்ளார். இத்தேர்தலில் போட்டியிடுவதற்காக மொத்தமான 19 வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் அடிப்படையில் இலங்கையில் அரசியல் அமைப்பின் 18 (அ) இல் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தினை அடிப்படையாகக் கொண்டு 3 ஆவது முறையாகவும் போட்டியிடும் வாய்ப்பைப் பெற்றிருந்த மஹிந்த ராஜபக்ஷ தனது இரண்டாவது பதவிக்காலத்தின் இரண்டு ஆண்டுகள் மீதமிருக்கும் நிலையில் கடந்த வருடம் நவம்பர் 20 ஆம் திகதி மக்கள் விருப்பினை அறியும் நோக்கில் தான் பொதுத் தேர்தல் ஒன்றுக்குச் செல்வதாக தேர்தல் ஆணையாளருக்கு அறிவித்திருந்தார்.
இதனையடுத்து கடந்த நவம்பர் 21 ஆம் திகதி தேர்தல் ஆணையாளரினால் வேட்புமனு ஏற்றுக் கொள்ளும் திகதியாக 2014 டிசம்பர் 08 அறிவிக்கப்பட்டதோடு 2015 ஜனவரி 08 தேர்தல் தினமாகவும் பிரகடனப்படுத்தப்பட்டது.
அதன் படி கடந்த ஒரு மாத காலமாக அரசியலில் பல்வேறு மாற்றங்கள் உண்டானதோடு பிரதேச சபை முதற்கொண்டு, மாகாண சபை, பாராளுமன்றம் ஆகியவற்றில் மக்கள் பிரதிநிதிகளின் கட்சித் தாவல்கள் போன்றவற்றின் மூலம் மக்களிடம் மாத்திரமல்லாது அரசியல்வாதிகளிடமும் அதிக எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியதாக இத்தேர்தல் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தேர்தல் அறிவித்ததனை அடுத்து மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்துப் போட்டியிடுவதற்காக பல்வேறு தரப்பிலிருந்தும் பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த பொது வேட்பாளர் யார் எனும் கேள்விக்கு அதிர்ச்சியளிக்கும் வகையிலான பதிலாக அரசாங்கத்தின் முக்கிய அமைச்சரவை அமைச்சராகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளராகவும் பதவி வகித்த மைத்திரிபால சிறிசேன அவர்கள் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளால் தேர்தல் அறிவிக்கப்பட்டு களமிறக்கப்பட்டார்.
இதன் அடிப்படையில் உருவான பொது எதிரணியின் முக்கிய அங்கத்தவரான ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஜனநாயகக் கட்சி, ஜாதிக ஹெல உருமய, ஜனநாயக மக்கள் முன்னணி, முஸ்லிம் தமிழ்த் தேசிய முன்னணி, முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் என்பன அங்கம் வகிக்கின்றன.
தேர்தல் அறிவிக்கும் முன்பாக மொத்தமான 161 பாரா ளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தில் அங்கம் வகித்தனர். தேர்தல் அறிவித்தன் பிற்பாடு கட்டம் கட்டமாக அரசாங்கத்தில் அங்கம் வகித்த முக்கிய பிரதான கட்சிகளின் 28 பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசிலிருந்து வெளியேறியதோடு மாகாண சபை, மற்றும் பிரதேச சபைகளின் மக்கள் பிரதிநிதிகளும் பொது வேட்பாளரை ஆதரிக்கும் வகையில் கட்சித் தாவல்களில் ஈடு பட்டனர்.
ஒரு புதிய மாற்றம் எனும் தேர்தல் விஞ்ஞாபனத்தின் அடிப்படையில் தனது தேர்தல் பயணத்தை ஆரம்பித்த வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன அவர்களின் முழுப் பெயர் பல்லேவத்தை கமராலகே மைத்திரிபால சிறிசேன ஆகும்.
1951 ஆம் ஆண்டு செப்டெம்பர் 03ஆம் திகதி பொலன்னறுவையில் பிறந்த இவர் இரண்டாம் உலக மகா யுத்தத்தில் பங்குபற்றிய வீரரான புகழ் வாய்ந்த அல்பர்ட் சிறிசேன மற்றும் நந்தவதி தம்பதியின் மகனாவார். பொலன்னறுவை ரோயல் கல்லூரியில் கல்வி கற்ற இவர் குண்டசாலை விவசாய பாடசாலையில் டிப்ளோமா பட்டம் பெற்றதோடு அரசியல் விஞ்ஞானத்தில் டிப்ளோமா பட்டத்தினை ரஷ்யாவின் மக்சிம் கார்கி இலக்கிய கல்லூரியில் பெற்றார்.
1967 இல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து தனது அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்த இவர் 1971 ஜே.வி.பி. கலவரத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். 1974 இல் பளுகஸ்தமன பல்தேவை கூட்டுறவு சங்கத்தில் கொள்வனவு உத்தியோகத்தராக கடமை புரிந்த இவர் 1976 இல் கிராம சேவகராக தனது கடமையை பொறுப்பேற்றார். 1978 இல் தனது பதவியை இராஜினாமா செய்த இவர் முழு நேர அரசியலுக்குள் நுழைந்தார். 1979 இல் பொலன்னறுவை மாவட்ட ஸ்ரீல.சு.கட்சி செயலாளராக நியமனம் பெற்றார். 1980 இல் ஸ்ரீல.சு.க. வின் பொலன்னறுவை மாவட்ட அமைப்பாளராக நியமிக்கப்பட்டார்.
1981 இல் அகில இலங்கை ஸ்ரீல.சு.க. இளைஞர் மன்றத்தின் தலைவரான இவர் ஸ்ரீல.சு.கட்சி யின் மத்திய செயற்குழுவிற்குள் உள்வாங்கப்பட்டார். 1989 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு பொலன்னறுவ மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 1994 இல் மீண்டும் பாராளுமன்றத்திற்கு தெரிவான இவர் விவசாய பிரதியமைச்சராக நியமனம் பெற்றார். 1997 இல் மகாவலி அபிவிருத்தி அமைச்சராக நியமனம் பெற்று அமைச்சரவை அந்தஸ்து பெற்றார்.
2000 ஆம் ஆண்டில் ஸ்ரீல.சு.கட்சியின் பிரதிச் செயலாளராக நியமனம்பெற்றதோடு அதே ஆண்டில் மீண்டும் பாராளுமன்றத்திற்கு தெரிவானார். 2001 ஆம் ஆண்டில் ஸ்ரீல.சு.கட்சியின் பொதுச் செயலாளராக நியமனம் பெற்ற இவர் அதே வருடத்தில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றபோதும் அவரின் கட்சி தோல்வியைச் சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
2004 இல் மீண்டும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர் பாராளுமன்ற அவைத் தலைவராக நியமனம் பெற்றதோடு விவசாயம், மகாவலி மற்றும் ரஜரட்ட அபிவிருத்தி அமைச்சராக நியமனம் பெற்றார். 2007இல் ஏற்பட்ட அமைச்சரவை மாற்றத்தின்படி விவசாய அபிவிருத்தி அமைச்சராக மைத்திரிபால சிறிசேன நியமிக்கப்பட்டார்.
2008, ஒக்டோபர் 09ம் திகதி கொழும்பு, பொரலஸ்கமுவவின் பிரிவெனா சந்தியில் இடம்பெற்ற எல்.ரீ.ரீ.ஈ தற்கொலைக் குண்டுதாரியின் இலக்கிலிருந்து மயிரிழையில் உயிர் தப்பியபோதிலும் அத்தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததுடன் 7 பேர் காயமுற்றிருந்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
2010 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத்திற்கு மீண்டும் தெரிவான மைத்திரிபால அவர்கள் சுகாதார அமைச்சராக தனது பொறுப்புகளை கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு நவம்பர் 21ஆம் திகதி தனது அமைச்சரவை பதவியை இராஜினாமா செய்த மைத்திரிபால சிறிசேன எதிரணியின் பொதுவேட்பாளராக மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு எதிராக 2015 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு தான் மக்களுக்கு வழங்கப் போகின்ற சிறந்த மாற்றத்திற்கான மக்கள் ஆணையை அமோக வெற்றியீட்டியதன் மூலம் நிர்ணயித்து ள்ளார். 100 நாள் வேலைத் திட்டத்தினை மையமாகக் கொண்டு மைத்திரிபால சிறிசேனவினால் வெளியிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் பல்வேறு முக்கிய அம்சங்கள் உள்ளடக்கப்பட் டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
அதன் அடிப்படையில்
* தற்போதுள்ள தான்தோன்றித்தனமாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்கி அமைச்சரவை ஊடாக பாராளுமன்றத்தோடு தொடர்புற்ற நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரசியலமைப்பை உருவாக்குதல்,
* விருப்பு வாக்கு முறை யை நீக்கி ஒவ்வொரு தேர்தல் தொகுதிக்கும் கட்டாய மான ஒரு பாராளுமன்ற பிரதிநிதியை தெரிவு செய்யப்படுவதை உறுதிப் படுத்தல்.
*18 ஆவது அரசியலமைப்புத் திருத் தத்தை இல்லாதொழித்து அதன் சார்பில் புதிய அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் நீதித்துறை, பொலிஸ், தேர்தல், கணக்காய்வு மற்றும் சட்டமா அதிபர் ஆகியவற்றின் நடுநிலை மை பேணப்படு வதற்கு சுயாதீனமான ஆணைக் குழுக்களை நியமித்தல்,
* அரச ஊழியர்களின் சம்பளத்தை 10,000 ரூபாவாக அதிகரித்தல்,
* மாதாந்த சமுர்த்தி கொடுப்பனவை இரு மடங்காக்குதல்,
* ஓய்வூதியம் பெறு வோரின் சம்பள முரண்பாட்டை நீக் கும்வரை 3,500 ரூபா மாதாந்த இடைக்கால கொடுப்பனவை வழங்குதல்,
* ஒட்டுமொத்த கல்விக்கு ஒதுக்கீடு செய்யும் தொகையினை தேறிய உள்நாட்டு உற்பத்தியின் 6 வீதமாக உயர்த்துதல்.
* பல்கலைக்கழக மஹபொல மாணவர் உதவியை 5,000 ரூபாவாக உயர்த்துவதோடு தொழில்நுட்பக் கல்லூரிகளில் பிரவேசிக்கும் இளைஞர், யுவதிகளுக்கு கடன் வழங்குதல்.
* 10 இலட்சம் உள்நாட்டு வெளிநாட்டு தொழில்வாய்ப்புகள் வழங்கு வதோடு பட்டதாரிகளுக்கு தகுதியான வேலைவாய்ப்பினை வழங்குதல்.
* எரிபொருள் மூலம் அரசு அறவிடும் 4,000 கோடிக்கும் மேற்பட்ட வரியை நீக்கி எரிபொருள் விலையைக் குறைப்பதன் மூலம் பொதுப்போக்குவரத்து, முச் சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள் களுக்கு விசேட சலுகையினை வழங்குவதோடு, அரச, தனியார் பஸ் போக்குவரத்து மற்றும் புகையிரத சேவைகள் மேம்படுத்தி ஒன்றிணைந்த கால அட்டவணையை தயாரித்தல்.
* எரிபொருள், மின்சாரம் தொடர்பாக விலை சூத்திரமொன்றை தயாரி த்தல்.
* அரச ஊடகங்கள் சமநிலையான சேவையை நாட்டிற்கு வழங்குவதை உறுதிப்படுத்துவதோடு ஊடக சுதந்திரத்தையும் தகவல் அறியும் உரிமையை வழங்குதல்.
* நாட்டில் ஏற்பட்ட பாரிய ஊழல்களை நிறுத்துவதன் மூலம் கடந்த 6 ஆண்டுகளில் ஏற்பட்ட அபிவிருத்தியைப் போன்று பத்து மடங்கு அபிவிருத்தியை நாட்டில் ஏற்படுத்துதல்.
* போதைவஸ்துக்கள் மது மற்றும் சிகரெட் தொல்லைகளில் இருந்து நாட்டை விடுவித்தல்.
* போதைவஸ்துக்களுக்கு அடிமை யானோருக்கான விசேட புனர்வாழ்வு நிலையங்கள் அமைத்தல்.
*சிகரெட் பொதியில் 80 வீத உருவப்பட ரீதியிலான எச்சரிக்கை அறிவுறுத்தலை வழங்குதல்.
* சிறுநீரக நோய்களுக்கு காரணமான விவசாய இரசாயன பொருள் இறக்குமதியை தடை செய்தல்.
*விவசாய ஓய்வூதியத்தை வாழ்க்கைச் செலவிற்கேற்ப அதிகரித்தல்.
* விவசாய உற்பத்திகளுக்கு உத்தரவாத விலை வழங்குவதோடு சிறு விவசாயிகளுக்கு விவசாய காணி மற்றும் நீர் வழங்குதல்
* அவசியமான சகல மருந்து வகை களையும் வைத்திய பரிசோதனைக ளையும் குறைபாடின்றி அதற்குப் பொருத்தமான அரச நிறுவனங்களால் வழங்குதல்
* கர்ப்பிணித் தாய்மாருக்கு போசாக்கு டைய உணவைப் பெறும் வகையில் 20,000 ரூபா கொடுப்பனவு வழங்குதல்.
*வெளிநாட்டு சேவை முழுமையாக தொழில்சார் நிபுணத்துவம் வாய்ந்த அதிகாரிகளினாலும், தொழில்சார் தேர்ச்சியாளர்களாலும் செயற்படு த்தப்படும் வகையில் வெளிநாட்டு சேவையுடன் இணைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல், உறவினர் நியமனங்களையும் இரத்து செய்து முழுமையான மறுசீரமைப்பை செய்தல்.
*உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கு விசேட வரிச் சலுகையும் முன்னு ரிமை வழங்குதல்.
என்பன அதில் உள்ளடக்கப்பட்டுள்ள முக்கிய விடயங்களாகும்.
இது வரை தான் போட்டியிட்ட சகல பொதுத் தேர்தல்களிலும் வெற்றியீட்டிய பெருமையை தன் வசம் கொண்டுள்ள மைத்திரிபால சிறிசேன அவர்கள், இலங்கை வரலாற் றில் முதன் முறை யாக ஜனாதிபதி யாக இருந்த ஒரு வரை தோற்கடித்த வேட்பாளராவார்.

0 comments:

Post a Comment

 
நாளைய தேசம் © 2013. All Rights Reserved. Design by naalaiyathesham
Top