சேர் அல்பிரட் பிரான்சிசு மொலமூர் (Alfred Francis Molamure)1888 ஆண்டு  பெப்ருவரி மாதம் 07திகதி தேடிகமவில் பிறந்தார்.  தனது கல்வியை கொழும்பு கல்கிசை புனித தோமையர் கல்லூரியில் மேறக்கொண்ட அவர் அக் கல்லூரியின் கிரிகெட் அணிக்காகவும்  1898- 1903 ஆனா  காலப்பகுதியில் விளையாடினார். அரசாங்க சபைக்கான முதலாவது தேர்தல்கள் 1931 ஜூன்  23 இல் நடைபெற்றபோது டெடிகமைத் தொகுதியில் இருந்து தெரிவு செய்யப்பட்டார். தெரிவு செய்யப்பட்ட அரசாங்க சபை கூடியபோது ஜூலை ஏழாம் திகதி பிரான்சிசு மொலமூர் அவை முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இரகசிய வாக்கெடுப்பில் பெரும்பான்மைச் சிங்களவரின் பிரதிநிதியாக  பெயர் பிரேரிக்கப்பட்ட இவர் சிறுபான்மையினத்தவரின் பிரதிநிதியாக பிரேரிக்கப்பட்ட நியமன உறுப்பினர் சேர் சிறீவாத் சினித்தர் என்பவரிலும் பார்க்க  பதினேழு மேலதிக வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டே சபை முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தனிப்பட்ட காரணங்களுக்காக 1934ம்  ஆண்டு  டிசம்பர் 10 ஆம் நாள் தனது பதவியை இராஜினாமா செய்தார். 1947ம் ஆண்டு இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் இலங்கை பிரதிநிதிகள் சபையில் 1947ம்  ஒக்டோபர்  மாதம் 14ம் நாள் சுதந்திர இலங்கையின் முதலாவது  சபாநாயகராகத் பதவியேற்றார் . அடெலின் மீதெனிய என்பவரைத் திருமணம் புரிந்த திரு மொலமூர்  சபாநாயகராக இருக்கும் போதே  1951ம் ஆண்டு  சனவரி 24ம் நாள் இல் காலமானார்.அதனைத் தொடர்ந்து கௌரவ சேர் அல்பேட் எஃப் பீரிஸ் சபாநாயகராகப்  பதவியேற்றார்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
நாளைய தேசம் © 2013. All Rights Reserved. Design by naalaiyathesham
Top