உலகம் வரலாற்றுப் போக்கில் பல்வேறு ஏற்ற இறக்கங்களை வந்துள்ளது. சமூகங்கள் எழுச்சிகண்டிருக்கின்றனவீழ்ந்து அழிந்து போயிருக்கின்றனஅவ்வகையில் பத்தொன்பதுமற்றும் இருபதாம் நூற்றாண்டுகள் முழு உலகிலும் தலைகீழ் மாற்றங்கள் நிகழ்ந்த காலப்பகுதிகளாக அமைந்தன.


இவ்வகையில் உலகளாவிய முஸ்லிம் ம்மத்தைப் பொறுத்தளவில் பத்தொன்பதாம்நூற்றாண்டின் இறுதிக்கூறுகள்இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பக்கூறுகள் மிகமுக்கியத்துவம் மிகுந்த அதேநேரம் வேதனைகள் நிறைந்த காலப் பிரிவுகளாகவும்அமைந்திருந்தனமுஸ்லிம்கள் அறிவுத்துறைகளில் படு வீழ்ச்சியடைந்து; இஸ்லாமியஃகிலாபத் வீழ்ந்துஇஸ்லாமுக்குக்கு எவ்விதப் பெறுமானமும் வழங்காத தேசியவாத,சோஷலிஸப் பெயர் கொண்டகம்யூனிசப் பெயர்கொண்ட மற்றும் மதச்சார்பற்‌, மத எதிர்ப்புக் கொண்ட கொடுங்கர ஆட்சிகள் தோற்றம்பெற்ற‌ காலப் பகுதிகளாகும்.ேலேகுறித்துக்காட்டப்பட்ட அனைத்து அவலங்களையும் தன் வாழ்நாளிலேயே வேதனைகளாகஅனுபவித்தவராக‌ உஸ்தாத் பதியுஸ்ஸமான் ஸஈத் நூர்ஸி அவர்கள் காணப்படுகிறார்கள்.



பிறப்பும் இளமைப்பருவமும்:
உஸ்தாத் ஸஈத் நூர்ஸி அவர்கள் இன்றைய துருக்கி தேசத்தின் கிழக்கு அனடோலியாபிரதேசத்தின் பிட்லீஸ் நகரின் அண்மையிலுள்ள‌ நூர்ஸ் எனும் கிராமத்தில் கி.பி. 1877 ஆம்ஆண்டு பிறக்கிறார்கள்இவரது குடும்பம் மிகுந்த ஆன்மீகப் பின்னணி கொண்டதாகவிளங்கியதுஅவரது ஆளுமை வளர்ச்சியில் முக்கிய தாக்கம் செலுத்திய‌ விடயமாக அவரதுகுடும்பப் பின்னணி காணப்பட்டது. "நான் பல்வேறு ஆசிரியர்களிடமும்நூல்களைவாசித்ததன் மூலம் பெற்றுக் கொண்ட‌ அறிவுடனும் இணைத்து எனது தாய் இளமையில் எனதுஉள்ளத்தில் விதைத்த விதைகள் மூலம் தோன்றிய வேர்களை மூலமாகவும் கொண்டே பெருவிருட்சமாக வளர்ந்தேன்என ஸஈத் நூர்ஸி அவர்கள் தனது ுய சரிதையிலே பதிவுசெய்கிறார்கள்அவரது தாயார் இபாதத்துக்களில் அதீத ஈடுபாடு கொண்டவர்அவரதுதந்தையும் கூட ுடும்பத்துக்காக ஆகுமான முறைகளில் உழைப்பதில்ஹராம்-ஹலால் பேணுவதில் மிகக் கண்டிப்பானவராக‌ இருந்தார்பக்தி சிரத்தை மிகுந்த மக்களைக் கொண்டஅவரது கிரா சூழலும் அவரில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியது.

ஸஈத் நூர்ஸியவர்கள் சிறு வயதிலேயே அல்குர்ஆனை மனனம் செய்திருந்ததோடுஇஸ்லாமியக் கலைகள் மாத்திரமன்றி கணிதம்வானவியல்தத்துவம்வரலாறு,புவிச்சரிதவியல்ெளதிகவியல்இரசாயனவியல்நவீன தத்துவங்கள் ஆகியஅறிவுத்துறைகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்ததோடு அவற்றை துறைபோகக்கற்றிருந்தார்சிறு வயது முதலே வயதுக்கு மீறிய அறிவு முதிர்ச்சி நூர்ஸி அவர்களிடத்தில்வெளிப்பட்டது.

தனது கல்வி பெறுகையைத் தன் ஒன்பதாவது வயதில் தனது மூத்த சகோதரரான முல்லாஅப்துல்லாஹ்வுடன் இணைந்து அருகிலுள்ள ஹிஸன் எனும் கிராமத்து மத்ரஸாவில்இணைந்து கொண்டதுடன் ஆரம்பித்தார்எனினும் அவர் கொண்டிருந்த அதீத புலமையின்காரணமாக தனது ஆசிரியர்மாருடன் முரண்பட்டுக்கொண்டு அடிக்கடி மத்ரஸாவிலிருந்துவெளியேறவோ அல்லது வெளியேற்றப்படவோ ேண்டிய நிலைமைகளுக்குள்ளாகினார்.இதனால் அடிக்கடி மத்ரஸாக்கள் ாறிக் கொண்டிருக்க வேண்டிய நிலையிலிருந்தார்.

அப்போது துருக்கிய கிராமங்கள் வழியே சுற்றித்திரிந்து கொண்டு வெறுமனே ரொட்டித் துண்டுகளையும் காட்டுப் பழவர்க்கங்களையும் உண்டு வாழப் பழகுகின்றார்பனி கவ்வும் கடும் குளிர்காலங்களிலும் ஆறுகளிலே மூழ்கிக் குளித்தெழுவார்அறிவு விருத்திக்காக அவ்வப்போது ஆங்காங்கே பட்டணங்களில் இடம்பெறும் உலமாக்களுக்கு மத்தியிலானவிவாதங்களில் கலந்துகொண்டு தன் அறிவை விருத்தி செய்து கொள்வார்இவ்வாறுபல்வேறு விநோதப் பழக்கங்களுடன் முறையான‌ கற்றல் இன்றித் திரிந்து கொண்டிருந்தஅவரை சரியாக இனங்கண்டு சன் மார்க்கக் கல்வியைப் புகட்டியவராக ஷெய்ஃக் முஹம்மத்லாலி என்பவர் கருதப்படுகிறார்.

ஸஈத் நூர்ஸியின் சிந்தனைகள்
ஸஈத் நூர்ஸி முழு இஸ்லாமிய உலகையும் பீடித்திருந்த‌ முதன்மை நோயாக ஈமானில்ஏற்பட்டிருந்த சறுக்கலையே கருதினார்மதச்சார்பின்மைக்கும்சடவாததுக்கும் உலகில் எந்தஇடமும் கிடையாதென ஆணித்தரமாக வாதிட்டார்.

ஸஈத் நூர்ஸி அவர்களினது வாழ்வு முழுவதினதும் கனியாக எமக்கு அவரது சிந்தனைகளை இன்றளவும் தந்து கொண்டிருப்பது அல்குர்ஆனுக்கான தனித்துவமான தஃப்ஸீராக விளங்கும் ரிஸாலா-யே-நூர் ஆகும். இது அக்காலவெளிகளில் கொடிய மதச்சார்பின்மை கோலோச்சிக் கொண்டிருந்த வேளைகளில் இஸ்லாமிய தூதின் உயிர்நாடியான ஈமானைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்குக் கொடுக்கும் வேலையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டது.

அவர் ரிஸாலா-யே-நூரை எழுதத் தொடங்கும் முன் நிகழ்ந்த ஒரு சம்பவம் நினைவுகூரத்தக்கதுஒரு நாள் “ான் முழு உலகையும் நோக்கிப் பிரகடனம் செய்கிறேன்.கண்ணியமிக்க இறை வார்த்தைகள் பொதிந்த அல்குர்ஆன் பிரகாசம் நிறைந்தநேர்வழிகாட்டக்கூடிய அறிவுக் கருவூலமாகும்அதன் பிரகாசம் ஒருபோதும் மங்காது எனஅறைகூவல் விடுத்தார்கள்அதே தினம் அவரது கனவில் தோன்றிய தூதர்(ஸல்அவர்களிடம்தனக்கு அல்குர்ஆனின் விளக்கத்தைத் தருமாறும் அதன் நிழலில் வாழ அருள்புரியவும்அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறும் வேண்டுகிறார்கள்அதற்கு செவிசாய்த்து தூதரவர்கள்எவரிடமும் இரந்து நிற்கக் கூடாது என்ற நிபந்தனையுடன் பதிலளித்தார்கள்முழு உலகெல்வங்களையும் பெற்ற திருப்தியோடு விழித்த இமாமவர்களின் உள்ளத்தில் அல்குர்ஆனியஅறிவும் விளக்கமும் ஆழமாகப் பதிந்தது.

பதீயுஸ்ஸமான் குறித்து 1995ம் ஆண்டில் நடந்த சர்வதேச ஆய்வு மாநாடொன்றிலே இன்றைய துருக்கிய ஜனாதிபதியும் அன்றைய இஸ்தான்பூல் மேயருமான ரஜப் தையிப் எர்தோகான் இவ்வாறு பதீயுஸ்ஸமானை அடையாளப்படுத்தினார்: “ஸஈத் நூர்ஸி இன்னும் தோண்டியெடுக்கப்படாத புதையல்பதீயுஸ்ஸமான் இவ்வுலகிற்கு வந்த காலகட்டத்தில் நமது நிலைமை தலைகீழாக இருந்ததுபதீயுஸ்ஸமான் நம் சமூகத்தின் நோயினைத் துல்லியமாகக் கண்டறிந்துநமது விமோசனத்துக்கான வழி இறை நம்பிக்கையே என நம்பினார்அந்த இறை நம்பிக்கையை சில விதங்களில் மறுவரையறை செய்து வழங்கினார்.முஸ்லிம்களும் இஸ்லாமிய உலகும் காப்பாற்றப்பட வேண்டுமென்றால் அவர்களுடைய ஆன்மாக்களில் இறைநம்பிக்கையின் முழுமாற்ற மூச்சை மீண்டும் ஊத வேண்டும் எனக் கூறினார்.”

உஸ்தாத் ஸஈத் நூர்ஸி பல்வேறு நாடுகளுக்கும் பயணம் செய்பவராகக் காணப்பட்டார்கள்.லிபியாவுக்குப் பயணம் செய்து அங்கு ஸனூஸி இயக்கத் தலைவரை சந்தித்தார்கள்இதுபிற்காலத்தில் தனது மாணவர்களை ழுங்கமைக்க‌ உதவியதாக ஸஈத் நூர்ஸியவர்கள்பிற்காலத்தில் குறிப்பிட்டார்கள். அவர்கள் இஸ்லாமின் எதிரிகளோடு யுத்த முனையில் நேரடியாகக் களமிறங்கிப் போராடுற்கும் இந்தத் தொடர்புகள் தான் உந்துசக்தியாக அமைந்திருக்கலாம்குறிப்பாக முதல் உலக மகா யுத்த காலப் பகுதியில் துருக்கியைஆக்கிரமிக்க ந்த ரஷ்ய படையினருக்கெதிராகத் தன் மாணவர்களுடன் இணைந்துமேற்கொண்ட ஆக்கிரமிப்புக்கெதிரான யுத்தம் பிரபல்யம் மிக்கது. இதன்போது அவர் சிறைப் பிடிக்கப்பட்டு ரஷ்யாவிலும் சிறையில் இருந்தார்பின் அங்கிருந்து விடுவிக்கப்பட்டு கிழக்கு ஐரோப்பாவினூடாக துருக்கியை வந்தடைந்தார்இதனை விடுத்து பல முறைகள் கமாலிஸ அரசால் சிறைபிடிக்கப்பட்டும் நாடுகடத்தப்பட்டும் வீண் வழக்குகள் தொடுக்கப்பட்டு அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டுமிருந்தார்.

மிக முக்கியமாக ஸஈத் நூர்ஸி அவர்களின் சிந்தனை ஆளுமையில் தாக்கம்செலுத்தியவர்களாக‌ ஷெய்ஃக் அப்துல் காதர் ஜீலானி மற்றும் ஷெய்ஃக் ஹ்மத் ஸிர்ஹிந்த்ஆகியோர் முக்கியமானவர்களாகக் காணப்படுகிறார்கள்அவர்களது நூல்களை அதிகம்வாசிப்பவராகவும் இமாம் அவர்கள் இருந்தார்கள். அதேவேளை இமாம் கஸ்ஸாலியின்இஹ்யாஉ உலூமித்தீன்’ நூலின் தாக்கமும் அவரது ரிஸாலாயே-நூரில் காணப்படுகிறது.
  
உஸ்தாத் நூர்ஸியவர்கள் இஸ்லாமை நவீன உலகிற்கேற்ப‌ அதனது அறிவியல் மொழியில்முன்வைக்க வேண்டுமெனக் கருதினார்நவீன அறிவியல் ழுப்பும் 'இறைவன்குறித்தஐயங்கள் எவ்வித அடிப்படையும் அற்றவை என நிரூபித்தார்தன் சிந்தனைகளுக்கேற்பஇஸ்லாமியக் கலைகளையும் நவீன அறிவியல் கலைகளையும் ஒருங்கிணைத்த பாடத்திட்டம் ஒன்றை உருவாக்கி அதனை 'மெத்ரெஸெது ஸெஹ்ராஎனும் பெயரில்செயலுருப்படுத்த‌ முனைந்த்தார்எனினும் துரதிர்ஷ்டவசமாக உரிய அனுசரணைகள்கிடைக்காது அது இறுதி வரைக்கும் கைகூடாமலேயே போயிற்று.

ஜாஹிலிய்யத் குறித்த அவரது நிலைப்பாடும் எளிமையானது எவர் தன்னையும் தனது ரப்பையும் அறிந்துகொள்ளவில்லையோ அதுதான் ஜாஹிலிய்யத்’ என வரைவிலக்கணப்படுத்தினார்அவ்வகையில் அவர் எவரையும் அக்காலவெளியில் இஸ்லாமை விட்டும் தூரப்படுத்திப் பார்க்கவில்லை.

அரசியலில் நேரடியாக ஈடுபடுவதைப் பொறுத்தளவில் கூட நடுநிலை பேணுதலையே வலியுறுத்தினார். மதமின்றிய அரசியலை மறுத்த அதேநேரம் மதம் கலந்த அரசியல் நயவஞ்சகத்தனமானதாக மாறிவிட்டிருக்கிறது எனவும் அவர் சாடினார்அவரது சிந்தனையில் ஒரு பிரதான அம்சமாக இருந்தது முரண்பாடுகளை விட்டும் தூரமான சமூகமொன்றைத் தோற்றுவிப்பதாகும்அவ்வாறானதொரு சமூக அமைப்புத் தான் இஸ்லாம் வளர ஏதுவான சூழல் என ஆழமாக வலியுறுத்தினார்அவரது நம்பிக்கையைத் தான் நாம் இன்று உலகில் கண்டுகொண்டிருக்கிறோம்இஸ்லாமிய உலகின் மீது தொடர்ந்து மேற்குலகு முரண்பாடுகளைத் திணித்துக் கொண்டிருக்கிறதுஇஸ்லாம் வளர ஏதுவான சூழல் மறுக்கப்படுக் கொண்டே இருக்கிறது.

டமஸ்கஸ் பிரசங்கம்
கி.. 1914 இலே ஸஈத் நூர்ஸியவர்கள் டமஸ்கஸ்உமைய்யா பள்ளிவாசலிலே வரலாற்றுப் புகழ் மிக்கஉரையொன்றை நிகழ்த்தினார்கள். 10,000 பேருக்கு மேல்கலந்து கொண்ட வ்வுரையிலே இஸ்லாமிய உலகைப்பீடித்திருந்த‌ நோய்களைத் தோலுரித்துக் காட்டினார்.அடிமட்டத்திலிருந்து கட்டியெழுப்பப்படும் ஒருசீர்திருத்தத்தை நோக்கி அழைப்பு விடுத்தார்மேலும்றிவுத்துறையில் அமைந்த ஓர் எழுச்சியை நோக்கிஅறைகூவல் விடுத்தார்இப்பிரசங்கம் 'ஃகுத்பா ஷாமிய்யா'எனும் பெயரில் பிரபலமடைந்து இன்று வரைக்கும்பதிப்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறதுஇது 'டமஸ்கஸ்பிரசங்கம்எனும் பெயரில் தமிழிலும் வெளிவந்திருப்பதுுறிப்பிடத்தக்கது.

இப்பிரசங்கம் இஸ்லாமிய எழுச்சி குறித்து அவருக்கிருந்த ஆழ்ந்த பிரக்ஞையை வெளிக்காட்டியதுஅவ்வுரையில் இஸ்லாமிய உலகின் கல்வி முறைகள் அடிமட்டத்திலிருந்து சீர்திருத்தப்பட வேண்டுமென முழங்கினார்சமயமும் நவீன அறிவியலும் ஒன்றிணைத்த கல்வி வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தினார்அவரது மெத்ரெஸெது ஸெஹ்ரா’ திட்டத்தின் சாரம்சமாகவும் இதுவே விளங்கியது. நவீன அறிவியலைக் கற்றுக் கொள்வதனைக் காலத்தின் ஜிஹாத் என அடையாளப்படுத்தினார்.

ரிஸாலா-யே-நூர்
ஸஈத் நூர்ஸியின் செழுமை மிகு சிந்தனைகளை இன்றளவும் உலகிற்கு வழங்கிக்கொண்டிருப்பது அவரது ரிஸாலா-யே-நூர் தொகுப்புக்களாகும்புனித அல்குர்ஆனுக்குவிளக்கவுரையாக அமைந்த இத்தொகுப்பு அறிவியல் கண்ணோட்டத்துடன் அல்குர்ஆனைஅணுகும் அமைப்பில் காணப்படுகிறதுஉலகில் பெரும்பாலான மொழிகளுக்குப்பெயர்க்கப்பட்ட அல்குர்ஆன் விரிவுரையாகவும் இத்தொகுப்பே காணப்படுகிறதுஎளியகதைகளை உதாரனங் கூறுவதன் மூலமாகவும் குத்தறிவு  ரீதியான விவாதங்கள் என்பனமூலமாக அனைத்துத் தரப்பாருக்கும் புரியும் விதத்தில் ரிஸாலா-யே-நூரின் ன் பாணிஅமைந்து காணப்படும். இறுதியில் ஈமானை நோக்கியே திருப்பப்படும். அல்லாஹ்வின் இருப்பும் ஏகத்துவமும்ஈமானின் யதார்த்தம், கழா-கத்ர் கோட்பாடுகள்நுபுவ்வத்மரணத்தின் பின் மீளெழுப்பல்மானிட நம்பிக்கைக் கோட்பாடுகள்மலக்குமார்கள்முன்னைய இறைவேதங்கள் என ரிஸாலாக்களின் தலைப்புக்கள் விரிந்து செல்கின்றது.

அவ்வகையில் இக்களஞ்சியம் மனிதன் எங்கிருந்து வந்தான்அவன் எங்கே போகவேண்டும்?விஞ்ஞானமும் மதமும் ஒன்றுபடுமாமலக்குகள் போன்று மனிதனுக்கு அப்பாற்பட்ட படைப்புக்கள் உண்டாமரணத்தின் பின்னும் வாழ்வு உண்டா?என்பன போன்ற நவீன மானுட கேள்விகளுக்குப் பதிலளிக்கவிழைகிறது.

ஸஈத் நூர்ஸியின் வாழ்வினதும் அவரது ரிஸாலாவினதும் சிந்தனைப் போக்கின்படி அவரது வாழ்வின் மூன்று முக்கிய கட்டங்களின் பாதிப்புக்களுக்கு உட்பட்டுச் செல்கிறது:
·        1877-1925: ஆண்டுகளில் அவர் ஒரு சமூகப் போராளியாகத் துடிப்புடன் செயற்பட்ட காலங்கள்.
·        1926-1949: ஆண்டுகள் அவர் ஒடுக்கப்பட்டும் நாடுகடத்தப்பட்டும் துன்புறுத்தல்களுக்குட்பட்டு வாழ்ந்த காலப் பகுதிகள்.
·        1950-1960: அங்கீகரிக்கப்பட்ட மக்கள் தலைவராக இருந்த காலங்கள்.

இவற்றுள் பழைய ஸஈதிலிருந்து புதிய ஸஈதாக உருப்பெற்றதாகத் தன்னை உருவகிக்கும்  முதல் உலகப் போர் மற்றும் ஃகிலாபத் வீழ்ச்சியுடன் தொடர்ச்சியாக நாடுகடத்தப்பட்டுக் கொண்டேயிருந்த 1925-1950கள் வரையான காலமே ரிஸாலா-யே-நூரின் பொற்காலமாகும்.இப்பகுதியில் தான் ரிஸாலாக்கள் முழு வீச்சுடன் சமூகத்தை அடைந்துகொண்டிருந்தன.ரிஸாலா-யே-நூர் குறித்துக் குறிப்பிடும் றிஞர்கள்இஸ்லாமுக்கு மிகவும் இருள்மயமானதாகக் காணப்பட்ட ஒரு காலப் பகுதியில் இஸ்லாத்தின் டிப்படை நம்பிக்கைகளைப்பாதுகாக்கும்   பெரும் பணியைச் செய்த மாபெரும் பொக்கிஷம் என வர்ணிக்கின்றனர்.

இஸ்லாம் தொடர்பான எதுவும் பரப்பப்படுவது குற்றமாகக் கருதப்பட்ட முஸ்தபா கமாலின் கொடிய மதவிரோத ஆட்சியின் கீழால் உஸ்தாத் பதீயுஸ்ஸமான் ஸஈத் நூர்ஸியால் எழுதப்படும் ரிஸாலாக்களின் கையெழுத்துப் பிரதிகள் கீழ்மட்ட நூர் வாசகர்களுக்கு எடுத்துச் செல்லப்படும் பாணி சுவாரசியம் மிகுந்ததுஅச்சுப் பிரதியெடுக்கத் தடையென்ற காரணத்தால் கீழ்மட்டங்களில் அது கையெழுத்தாகவே பிரதிபண்ணப்படும்பின்னர் அது நூர்ஜூக்கள் எனப்படும் கீழ்மட்ட மாணவர்கள் வரை தொடர்ந்தேச்சையாகப் பிரதிபண்ணப்பட்டுக்கொண்டே செல்லும்இவ்வாறு அது சிலசமயங்களில் 60,000 வரையான பிரதிகள் வரைக்கும் பிரதிகள் எடுக்கப்பட்டதாகக் குறிப்புக்கள் காணப்படுகின்றன.

நாம் ரிஸாலா-யே-நூர் குறித்து நோக்குவதாயின் அதனை முக்கியமாக 5 பகுதிகளைக் கொண்ட ஒரு களஞ்சியமாக நோக்கலாம்அந்த ஒவ்வொரு பகுதி குறித்தும் மிகச்சுருக்கமாக நோக்குவோம்.

1.        வார்த்தைகள் - The Words - கலிமாத் - சஸ்லர்
இது 33 உப பிரிவுகள் கொண்டதுஇஸ்லாமிய நம்பிக்கைகள்அதன்பால் மனிதனுக்குள்ள தேவைகள் குறித்துப் பேசுகிறதுஇப்பகுதி கலந்துரையாடல்விவாதம்கேள்வி-பதில் என சுவாரசியமாகச் செல்கின்றது.

2.        கடிதங்கள் - Letters - மக்தூபாத் - மெக்தூபாத்
இது அவரது மாணவர்களுடனான கடிதப் பரிமாற்றத்துக்கூடான உரையாடல்களை உள்ளடக்கிய சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் பகுதியாகும்இப்பகுதியில் பிரதானமாக மரணம்நபித்துவம்பெற்றோருக்கு உபகாரம் புரிதல்சகோதரத்துவம் குறித்தும் பேசுகின்றது.குறிப்பாக 19 வது பகுதி 300க்கும் மேற்பட்ட தூதர்(ஸல்அவர்களது அற்புதங்களைக் குறித்துப் பேசுகின்றது.

3.        ஒளிக்கதிர்கள் - The Rays - ஷெஆஆத் - ஷுஆலர்
ரிஸாலா-யே-நூரின் இதயம் எனப்படும் பகுதி இதுதான்இங்கு ரிஸாலாக்கள் எழுதபட்டதன் அடிப்படை நோக்கங்கள் விளக்கப்படுகின்றது.

4.        மின்னல்கள் - The Flashes - லெம்ஆத் - லெம்ஆலர்
பிரார்த்தனைகளை உள்ளடக்கிய பகுதியாகும்யூனுஸ்(அலைமற்றும் அய்யூப்(அலை)ஆகியோரின் சோதனைக் கால பிரார்த்தனைகள் குறிப்பிடத்தக்கவைஇப்பகுதியில் நோயாளர்கள்வயோதிபர்கள் என பிணிகளால் பாதிக்கப்பட்டோருக்கான ஆறுதல் வார்த்தைகளாகக் காணப்படுகின்றன.

5.        அற்புதத்தின் அடையாளங்கள்  Signs of Miraculousness - இஷாராதுல் இஃஜாஸ் - இஷாராதுல் இஃஜாஸ்
இது சூரத்துல் பாத்திஹாவுக்கான விளக்கவுரைபிஸ்மில்லாஹ்வுக்கான விளக்கம்சூரத்துல் பகராவின் முதல் 33 வசன்ங்களுக்கான விளக்கங்கள்அல்குர்ஆனின் இலக்குகள்மறுமை நம்பிக்கையோடு தொடர்பான விடயங்கள் மற்றும் முக்கியமாக நாத்திகத்துக்கெதிராக அறைகூவல் விடுக்கும் பகுதி என விரிந்த பகுதியாக அமைந்திருக்கிறது.

பதீயுஸ்ஸமானின் தஃவா தொடர்பான கருத்துக்களிலிருந்து...
அவர் தஃவாவை மார்க்கத்தின் ஏவல்களுக்குக் கட்டுப்படுவதையும் இஸ்லாம் அளிக்கும் நிரந்தர சந்தோசத்தை மனிதனுக்கு அளிப்பதற்கும் அழைப்புவிடுத்தல்’ என வரைவிலக்கணப்படுத்தினார்அதனை அவர் அல்குர்ஆனை அடிப்படையாகக் கொண்டே செயல்பட்டார்தஃவாவின் நோக்கமாக அவர் படைப்பாளனையும் அவனது ஏகத்துவத்தையும் அறிவுபூர்வமாகவும் தர்க்க ரீதியாகவும் நிறுவுதல்’ என அடையாளம் செய்தார்.

இஸ்லாமியப் பணியாளார்கள் தமக்குள் பிளவுறுவதையும் அவற்றுக்கான தீர்வினையும் இவ்வாறு அடையாளப்படுத்தினார்:
·        சமூக அங்கீகாரம் அவர்களது இலக்காக மாறிவிடுகின்றமை – வெகுமதியை அல்லாஹ்விடம் மட்டுமே எதிர்பார்த்தல்.
·        மனோ இச்சையின்படி தான் மட்டுமே சரி என செயல்படல் – முரண்பாட்டில் உடன்பாடு கண்டு செயல்படல்.
·        உன்னத நோக்கங்களுக்குத் தவறான வழிமுறைகள் பிரயோகிக்கப்படுகின்றமை – அனத்து சந்தர்ப்பங்களிலும் உளத்தூய்மையை ஏற்படுத்திக் கொள்ளல்.
·        மற்றவர்கள் பற்றிய தூய மதிப்பீடின்மை  பொதுப்புள்ளிகளை இனங்காணல்.
·        ஆதிக்க மனப்பாங்கு – அல்குர்ஆன் கூறுகிறது: “நீங்கள் நன்மையான காரியங்களிலும் இறையச்சத்திலும் பரஸ்பரம் ஒத்துழைத்துக் கொள்ளுங்கள்மேலும் பாவம்மான காரியங்களிலும் வன்மத்திலும் ஒத்துழைக்கவேண்டாம்மேலும் அல்லாஹ்வுக்குக் கட்டுபடுங்கள்
·        உலக பிரதிபலன்களில் மட்டும் கவனம் குவிதல் – தூதர்(ஸல்மற்றும் ஸஹாபாக்களின் முன்மாதிரியைப் பின்பற்றுதல்.
·        தாராள மனம்மன்னிக்கும் மனம் இன்மை – மற்றவர்களின் பலவீன நிலையை உணர்தலோடு தன்னை சுயவிமர்சனம் செய்துகொள்ளல் மற்றும் மறுமைப் பிரதிபலனை மட்டும் எதிர்பார்த்தல்.

உஸ்தாத் பதியுஸ்ஸமானின் இறுதிக்காலம்
உஸ்தாத் அவர்களின் இறுதிக் காலத்தைப் பொறுத்தளவில் துருக்கியிலே கொடியமதச்சார்பின்மை கோலோச்சிய கமாலிஸ அரசு விடைபெற்று அத்னான் மந்திரீஸியின் ஜனநாயகக் கட்சி ஆட்சிபீடமேறியிருந்த காலமாகும். தேசியவாதியாக இருந்த அத்னான் மந்திரீஸி பல்வேறுபட்ட சிந்தனைப் போக்குகளுக்கும் இடமளிப்பவராக இருந்தார். இதனால்இவரது பிரசாரப் பணிகளுக்கு இருந்த கடுமையான தடைகள் தளர்வடைந்தன. வீண் வழக்குகள் அனைத்திலிருந்தும் விடுவிக்கப்பட்டார். அவரது எழுத்துக்களை அச்சுக்குக் கொண்டுசெல்லும் வாய்ப்புக்களும் அளிக்கப்பட்டது.

ந்நிலையில் 1960 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20ம் திகதி தனது 83 வது வயதில் உஸ்தாத்பதீயுஸ்ஸமான் ஸஈத் நூர்ஸி அவர்கள் வபாத்தானார்கள்.





http://siaafwriting.blogspot.com/2015/01/blog-post.html

0 comments:

Post a Comment

 
நாளைய தேசம் © 2013. All Rights Reserved. Design by naalaiyathesham
Top