அருள்வாக்கி அப்துல் காதர் புலவர் அவர்கள் 1866ம் ஆண்டு 30ம் ஜூன் திகதி  கண்டி போப்பட்டியில் பிறந்தார்.இவரது பாட்டன் ஆதம்பிள்ளை ராவுத்தர் அவர்கள் இந்தியாவின் திருப்புத்தூரிலிருந்து சிறு கோப்பித் தோட்டச் செய்கை மூலம் இலங்கை வந்தவராவார்.
அருள்வாக்கி அப்துல் காதர் புலவர்அவர்கள் தனது ஆரம்பக் கல்வியை உள்ளூர் இஸ்லாமிய மதரஸாவிலும் தமிழ் ஆங்கிலக் கல்வியை கண்டி டுவின்ஸ் அகடமியிலும் தொடர்ந்தார். அக்காலங்களில் தாய் மொழியான தமிழில் அதீத பற்றும் கவிதை ஆற்றலும உடையவராக காணப்பட்டார்.இது கண்ட அவரது தகப்பனார் ஆ.பி.அல்லாபிச்சை அவர்கள் இவரது தமிழ பற்றையும் கவிதை ஆற்றலையும் வளரத்துக்கொள்ளும்
நோக்கில் புலவரை தொடர்படிப்புக்காக தமிழகம் அனுப்பி வைத்தார்.
அங்கு மதுரை ஜில்லா திருபத்தூரில் உயர் கல்வி பெற்றதுடன் அக்கலாசாலையின் பிரதம ஆசிரியராக இருந்த மதுரகவி நாவலர் வித்துவசிரோன்மணி மஹ்மூத்முத்துவாப்பா புலவரிடம் தமிழ் இலக்கண இலக்கியம் சார்ந்த அணைத்து நூல்களயும் வழுவறக் காற்றுத் தேறினார். மேலும் அக்காலத்தில் தமிழ் நாட்டில் வாழ்ந்த தலை சிறந்த தமிழ் அறிஞர்களிடமெல்லாம்  இலக்கியத் தொடர்புகளை ஏட்படுத்திக் கொண்டார்.
புலவர் அவர்கள் அவதானம் செய்யும் கலையில் சிறந்து விளங்கினார்.இந்திய நாட்டில் நல்லறிஞரகள் வியக்கின்ற அளவுக்கு அவதானங்களை செய்து காட்டி அட்டவதானி என்று பெயர் பெற்றார்.
அத்தோடு இஸ்லாமிய மார்க்க ஞானங்களையும் பழந்தமிழ் இஸ்லாமிய இலக்கியங்களான சீராப்புராணம், ராஜநாயகம், புதுகுஷ்ஷாம், மஸ்தான் சாகிபு பாடல், திருப்புகழ் ஞானக கோவை ஆகியவைகளையும் ஆராய்ந்து பாராயணங்களில் கலந்து கொண்டு அதற்கான தெளிவுரைகளை சுவைபட நெறிப்படுத்தி  தனக்கானதோர் இடத்தை உருவாக்கிக் கொண்டார்.
புலவரது எழுத்துருவிலான படைப்புக்கள் 40க்கு மேல் என்று எண்ணப்படுகின்றது. இருப்பினும் 30 நூல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.ஆனால் அவை அனைத்தும் நூலுருப் பெறவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும்.புலவருடைய ஆக்கங்கள் அனைத்தும் இஸ்லாமிய அடிப்படையையும்  வரலாற்றையும் இறைநேசரகளின் சிறப்பையும் மையமாக் வைத்து ஆக்கப்பட்டவையாகும். 
புலவர் அவர்களது வெளிவந்த நூல்களிலே மிகவும் சிறப்பாக பேசப்படுவதும், உயர்வகக் கருதப்படுவதும் சாந்த்த்திருபுகழாகும். நபி பெருமானார் (ஸல்) அவர்களை பட்டுடைத்தலைவராகக் கொண்டு பாடப்பட்ட பாடல்கள் ஒவ்வொன்றும் துதியாகவும் பிரார்த்தனையாகவும் அமைந்துள்ளதுடன், புனிதத்தளங்கலாகிய மக்க மதீனா இதில் சிறப்பாக வாருணிக்கப்பட்டிருக்கின்றன.
புலவர்  அவர்களே முதன்முதலாக இலக்கிய சித்து செய்து காட்டியவர் என்பதும் இதுகாலவரையிலும்  இலக்கிய உலகில்  இவ்விலக்கிய சித்து யாராலும் செய்து காட்டப்படவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இலக்கிய உலகில் பற்பல ஆக்கங்கள் செய்திட்ட மெய்ஞ்ஞானி அருள் வாக்கி அப்துல் காதர் புலவர் 1918ம் ஆண்டு செப்தம்பர் மதம் 23ம் திகதி தனது 52வது வயதில் வாபத்தானார்கள். இன்னாளில்லா ஹி  வாஇன்ன இலைஹி ரஜியூன்.அன்னார் கண்டி மகிய்யவையில் நல்லடக்கம் செய்யப்பட்டார்.அவரது ஆக்கங்களையும் சேவைகளையும் அல்லாஹ்  அங்கீகரிப்பனாக.

நன்றி உலக இச்ச்லமிய மாநாடு 

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
நாளைய தேசம் © 2013. All Rights Reserved. Design by naalaiyathesham
Top