
தனது ஆரம்பக் கல்வியை அல்லாப் பிச்சைப் பள்ளியில்(கதீஜா மஹா வித்தியாலயம் )மூன்று ஆண்டுகள் பயின்றார். அங்கு குர்ஆனும் தமிழும் சேர்த்துக் கற்பிக்கப்பட்டது .1920, செப்டம்பரில் குர்ஆன் பள்ளிக்கூடக் கல்வியை நிறைவு செய்து கொண்டு 1921ம் ஆண்டில் வண்ணார்ப்பண்ணை இராமகிருஷ்ண மிஷன் வைத்தீஸ்வரா வித்தியாலயத்தில் கல்வியை தொடர்ந்தார்.பின்னர் இடைநிலைக் கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் 1923இல் 6 ஆரம்பித்தார். இந்து மாணவர்கள் மட்டுமே கல்வி கற்று அக்கல்லூரியில் அஸீஸ் முதல் முஸ்லிம் மாணவராக அனுமதிபெற்றார்.
1929இல் இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரியில் சேர்ந்து அங்கு 1929 -33 களில் பல்கலைக்கழகக் கல்வியை நிறைவு செய்து வரலாற்றில் (B.A.Hons) சிறப்புப் பட்டத்தைப் பெற்றார். பின்னர் இலங்கை அரசாங்கத்தின் கலைத் துறைக்கான புலமைப் பரிசிலுக்கு விண்ணப்பித்து அதிலும் வெற்றி பெற்றார். அதன் பயனாக 1933இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மேல் படிப்பைத் தொடர்வதற்காக இங்கிலாந்துக்குப் பயணமானார்.
இக்கலகட்டத்திலேதான் இலங்கை சிவில் சேவையாளருக்கான தேர்வில் அவர் சித்தி பெற்றார். அதனால், அவர் உயர் கல்வியைத் தொடராது நாடு திரும்பிய அசீஸ் அவர்கள் இலங்கையின் சிவில் சேவையில் இணைந்தார். இச்சேவையில் இணைந்த முதல் முஸ்லிம் இவர்களா ஆவார்.
1942ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16ம் திகதி உதவி அரசாங்க அதிபராக கல்முனைக்குச் சென்றார். அங்கு அவர் அரச பணிகளோடு மக்கள் சேவை முன்னெடுத்தார்.அக்காலத்திலே சுவாமி விபுலானந்தர் நெ மூத்த மூஸ்லிம் கவிஞரான காத்தான் குடி அப்துல் காதர் லெப்பை போன்றவர்களோடு தொடர்புகளையும் கொண்டிருந்தார்.
1943ம் ஆண்டு கண்டிக்கன் உதவி அரச அதிபராக மற்றம் பெற்றார்.அங்கு தனது அரசபணிகளுக்கு மத்தியில் பொதுப் பணிகளை தொடர்ந்த அவர் கண்டியில் முஸ்லிம் இளைஞர் இயக்கத்தையும் பின்னர் அகில இலங்கை வை எம் எம் எ பேரவையும் உருவாக்கினார்.

அரச சமூக பணிகளில் மாத்திரமன்றி இலக்கியப் பணிகளிலும் அறிஞர் அஸீஸ் பங்களிப்புச் செய்துள்ளார்கள்.இலங்கையில் இஸ்லாம்,அறபுத் தமிழ் எங்கள் அன்புத் தமிழ்,மொழி பெயர்ப்புக் கலை,மிஸ்ரின் வசியம்,கிழக்காபிரிக்காக் காட்சிகள்,ஆபிரிக்க அனுபவங்கள்,தமிழ் யாத்திரை போன்ற நூல்கள் அவரது இலக்கியப் பணிகளுக்கு சான்று பகர்கின்றன.
அறிஞர் அஸீஸ் அவர்கள் கொழும்பைச் சேர்ந்த உம்மு குல்தூம் இஸ்மாயில்
![]() |
என்பவரை 1937ம் ஆண்டு திருமணம் செய்தார். 1972ம் ஆண்டு மனைவி உம்மு குல்தூம் மறையும் வரை அறிஞர் அஸீஸ் வெற்றிகளின் பங்களிப்புச் செய்தார். இவர்களுக்கு மரீனா சுல்பிக்கா, முஹம்மத் அலி, இக்பால் பிள்ளைகள் பிறந்தனர்.
பலவழிகளில் முஸ்லிம் சமூகத்தின் வளர்ச்சியில் பங்காற்றிய அறிஞர் ஏ எம் ஏ அஸீஸ் அவர்கள் 1973ம் ஆண்டு நவம்பர் மதம் 24ம் திகதி தனது 72வது வயதில் இவ்வுலகை விட்டும் பிரிந்தார் ”இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்” அல்லாஹ் அன்னாரது சகல சேவைகளையும் பொருந்தி அவருக்கு சுவன பாக்கியத்தை அளிப்பானாக.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.