இமாம் ஷாமில் நக்ஷபந்தி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள்
ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டி போராடிய தலைவர் ஆவார்கள்.
ரஷ்யர் ஆள்புல விஸ்தரிப்பு வேகமாக இடம்பெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதியல் இமாம்
ஷாமில் ரஹ்மதுல்லாஹி அலைஹி பிறந்தார்கள். 19ம் நூற்றாண்டின் நூற்றாண்டின் தேசிய விடுதலை
போராட்டத்தின் சின்னமாக நோக்கப்படுகிறார்கள்.கஸக்ஸ்தான் மக்களின் மூன்றாவது இமாமாக
அவர்கள் மதிக்கப்படுகிறார்கள். மாவீரன் நெப்போலியனின் பெரும்படையை அழித்த ரஷ்யப்
படையினருக்கு இமாம் ஷாமில் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் படைக்கு ஈடுகொடுக்க
முடியவில்லை. நெப்போலியனுக்கு எதிரான படைகளை இரண்டு தடவைகள் அனுப்பியும் இமாம்
ஷாமில் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களை நெருங்கக் கூட முடியவில்லை. "நெப்போலியன்
கரியாக இருந்தால் இமாம் அவர்கள் நெருப்பாக மாறிவிடுவார்கள்". இமாம் ஷாமிலுடன்
போரிட சென்ற ரஷ்ய படையில் இரண்டு பேர் (தளபதியும், ஒரு போர் வீரரும்) மாத்திரமே உயிரோடு
திரும்புவார்கள் என்று துருக்கி வரலாற்று ஆய்வாளர் அல்பி யஸார் கூறுகிறார்ஒரு
இறைநேசரான இமாம் ஷாமில் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் தனது படையினரை ஆத்மீக
ரீதியிலும் வலுப்படுத்திக் கொண்டிருந்தார்கள். இதனால் தான் “சுஹைப் அபந்தி அல்;
பகினி அவர்கள் “தபாகத்” என்ற தனது புத்தகத்தில் இவ்வாறு
எழதியிருக்கிறார்கள் “ இமாம் ஷாமில் போராட்டங்கள் முடிவுக்கு வந்த போது ஷரீஆ புறக்கணிக்கப்பட்ட
விடயமாக மாறிவிட்டது என எழுதுகிறார். நக்ஷபந்தியா தரீக்காவின் ஆசிரியராகவும்
இருந்தார்கள். இமாம் ஒரு தரீக்காவின் ஷெய்க் ஆக இருக்கவில்லை என்பது தவறான
வாதமாகும். கிம்ரி கிராமத்தில் இருந்த சகலரும் இமாம் ஷாமில் அல்லது ஷெய்க் காஸி
முஹம்மத் ஆகியோரின் மாணவர்கள் ஆவார்கள்.இருபத்தைந்து
ஆண்டுகள் போராட்டத்தில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். கல்விக்காக
பைத்துல்மால் நிதி வழங்கப்பட்டது. ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொரு மத்ரஸா
அமைக்கப்பட்டது. கல்வியைத் தேடிச்செல்பவர்களுக்கு ஜிஹாதில் இருந்து
விதிவிலக்களித்தார்கள். யுத்தங்களில் தன் நிகரில்லாத் தளபதியாகப் திகிழ்ந்தார்கள்.
அவுல்கோ யுத்தத்தில் இமாம் ஷாமிலுடன் ரஷ்யர்கள் யுத்தம் செய்த போது இமாம் அவர்களின்
300 மூரீதுகள்
உயிரிழந்தார்கள். ஆனால் ரஷ்யப் படை நாளாந்தம் ஐயாயிரம் படைவீரர்களை இழந்து
கொண்டிருந்தது. மொத்தமாக 30ஆயிரம் ரஷ்ய சிப்பாய்கள் மரணமடைந்தார்கள்.
இறுதிக் காலத்தில் மதீனா
சென்றார்கள் இமாம் அவர்கள், அங்கு நிகழ்ந்த சம்பவம் ஒன்றை ஷெய்க் பதுருத்தீன் அப்பந்தி அவர்கள்
பின்வருமாறு பதிவு செய்துள்ளார்கள். “இமாம் ஷாமிலின் வருகையை அறிந்து கொண்ட
மதீனாவாசிகள் மஸ்ஜிதுன் நபவிக்கு விரைந்தனர். அவர்களை சந்திக்க முன்னர் கண்ணீர்
சிந்திய நிலையில் பெருமானாரின் சியாரத்திற்கு சென்று ஸலாம் சொன்னார்கள். “
சியாரத்தில் இருந்து புனிதமான ஒரு வெளிச்சம்
தோன்றி –வஅலைக்க
அஸ்ஸலாம் யா இமாம் அல் முஜாஹிதீன் என்று பதில் வந்ததுஅல்லாஹ் இவர்களை
பொருந்திகொள்வானாக.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.