இலங்கை முஸ்லிம்களின் மறுமலர்ச்சியின் முன்னோடி ஜனாப் ஐ.எல்.எம். அப்துல் அஸீஸ்
 ஜனாப் ஐ.எல்.எம். அப்துல் அஸீஸ் அவர்கள் 1867ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 27ம் திகதி சோகாதி மரிக்கார் மகன் ஐத்ரூஸ் மரிக்காருக்க மகனாக கொழும்பில் பிறந்தார்.தனது கல்வியை புறக்கோட்டை அரசினர் ஆங்கிலப் பாடசாலையில் மேற்கொண்ட அவர் தரம் ஆறில் முழுதாய் இடைநிருத்திக்கொண்டார்
சமூகப்பணியில் ஈடுபாடு கொண்ட இவர்கள் தனது இருபதாம் வயதில் அல் ஜாமியத்துல் இஸ்லாமியா என்ற இயக்கத்தில் பொதுச்செயலாளரானார்.இவ்வியக்கம் பின்னர் 1900 ஆண்டு சோனகர் சங்கமாக மாற்றம் பெற்றபோது அதன் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்
1980ம் ஆண்டு சபையில் முஸலிம்களுக்கான தனியான பிரதிநிதித்துவ கருத்துக்கு எதிராக 1885ம் முஸ்லிமகள் தமிழ் மக்களின் உற்பிரவு என்ற கோசமே வலுப்பெற்ற போது அதற்கெதிராக அறிஞர் சித்திலெப்பையுடன் இனைந்து போராடினார். இதன் விளைவாக 1889ம் ஆண்டு ஒக்டோபர் 29ம் திகதி முஸலிம்களுக்கான தனிப்பிரதிநிதித்துவம் அங்கீகரிக்கப்பட்டு ஜனாப் அப்துர் ரஹ்மான் அவரகள் நியமனமும் பெற்றார்கள். முஸ்லிம்களின் தனிப்பிரதிநிதித்துவ போராட்டத்திற்கு ஜனாப் ஐ எல் எம் அப்துல் அஸீஸ் அவர்கள் செய்த ஆய்வை 1907ம் ஆண்டு "இலங்கைச் சோனகர் இன வரலாறு" என்ற பெயரில் வெளியிடப்பட்டது.
1899ம் ஆண்டு அறிஞர் சித்திலெப்பையினால் வெளியிடப்பட்டு வந்த முஸ்லிம் நேசன் பத்திரிகையில் ஆசிரியராக இருந்த அவர் அதன் புதிய முகாமையுடன் ஏற்பட்ட முறன்பாடு காரணமாக அதிலிருந்து வெளியேறி 1900ம் ஆண்டு ''அல் ஸவாப்'' என்ற அரபுத்தமிழ் பத்திரிகையையும் 1901ம் ஆண்டில் ''முஸ்லிம் பாதுகாவலன்'' பத்திரிகையையும் வெளியிட்டார்.அரசும்,ஆங்கிலம் கற்றோரும் முஸ்லிம்களின் பிரச்சினைகளை அறிந்து கொள்ளும் பொருட்டு ''முஸ்லிம் பாதுகாவலன் '' பத்திரிகையில் சில பக்கங்களை "முஸ்லிம் கார்டியன் " என வெளியிட்டார்.
 அறிஞர் சித்திலெப்பை 1891 மருதானை பள்ளிவாயளில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய பின்னர் உருவாக்கப்பட்ட கொழும்பு கல்விச் சங்கத்தின் செயலாளராக செய்யப்பட்டார். இச்சங்கத்தின் மூலம் சமூகத்திற்கு பல சேவைகள் ஆற்றப்பட்டன. இதன் ஒரு சேவையாகவே முஹம்மதியா ஆன்கள் ஆங்கில பாடசாலை உருவாக்கப்பட்டது இப்பாடசாலையே பின்னர் இன்றைய  கொழும்பு ஸாஹிரா கல்லூரியா மாற்றப்பட்டது.
1905ம் ஆண்டு சட்டத்தரணி அப்துல் காதிர் அவர்கள் நீதிபதி லாயட்டால் துருக்கித் தொப்பி அணிந்து நீதிமன்றில் வாதாட முடியாது என்று தடைசெப்பட்ட போது கிளர்ந்தெழுந்து முஸ்லிம்களை ஒன்றுபடுத்தி போராட்டத்தை தலைமை தாங்கினார்.இப்போரட்டமே துருக்கித் தொப்பிகள் போராட்டம் என அழைக்கப்படுகிறது. பல விளிப்புணர்வு, ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்று இறுதியாக 1905ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் திகதி மருதானை பள்ளிவாயல் மைதானத்தில் சட்டவாக்க சபையின் அங்கத்தவர் அப்துர் ரஹ்மான் தலையில் இடம்பெற்ற போது ஜனாப் ஐ எல் எம் அபதுல் அஸீஸ் அவர்கள் சிறப்புரை ஒன்றும் ஆற்றினார்கள் எனபது குறிப்பிடத்தக்கது.இவரது தலைமையிலான இத்துருக்கி தொப்பிப் போராட்டத்தின் விளைவாக 1906ம் ஆண்டு மாரச் மாதம் 16ம் திகதி துருக்கித் தொப்பி அணிந்து நீதிமன்றம் செல்லலாம் என்று உச்சநீதிமன்றம் அனுமதியளித்தது.

துருக்கித் தொப்பிப் போராட்டம்,கொழும்பு ஸாஹிரா கல்லூரி, தனித்துவ இனப் போராட்டம் என முஸ்லிம் மறுமலர்ச்சியில் பாரிய பங்காற்றிய ஜனாப் ஐ எல் எம் அப்துல் அவர்கள் 1915ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ம் திகதி இறையடி சேர்ந்தார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜியூன்.
1993ம் ஆண்டு மே 22ம் மர்ஹூம் ஜனாப் ஐ எல் எம் அப்துல் அஸீஸ் அவர்களின் ஞாபகர்த்தமாக முத்திரை வெளியிடப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
நாளைய தேசம் © 2013. All Rights Reserved. Design by naalaiyathesham
Top