அல்ஹாஜ் அப்துல் லதீப் அவர்கள்  மாத்தறை மாவட்டம் வெலிகாமம் மாதுராகொடையில் தம்பி சாகிப்  மத்திச்சம், தாயார் அலீம உம்மா தம்பதியினருக்கு 1900 ஆம் ஆண்டு ஏப்ரில் 09ம் திகதி  பிறந்தார்.1910ம் ஆண்டு தனது ஆரம்பக் கல்வியை  வெலிகாமம் முஸ்லிம் வித்தியாலயத்தில் மேற்கொண்டார்.முஸ்லிம்கள் கல்வியில் அக்கறையற்றிருந்த அக்காலத்தில் தனது கல்வியினைத் தொடர்ந்த அவர் அக்கல்லூரியிலேய 1921ம் ஆண்டு உதவி ஆசிரியராக கடமை ஏற்றார்.
     ஈராண்டுகள் கழிந்தபின் 1923ம் ஆண்டு கோப்பாய் அரசினர் ஆசிரிய கலாசாலைக்கு அனுமதி பெற்றார் . இந்நிகழ்வினை அன்றைய கல்விப் பணிப்பாளராக இருந்த திரு எல் மாக்கிறே தனது 1923ம் ஆண்டு வருடாந்த அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.
“வெலிகாமம் முஸ்லிம் வித்தியாலயத்தின் பழைய மணாவரொருவர் இவ்வருடம் கோப்பாய் ஆசிரியர் கலசாலையிற்கு பிரவேசித்தார்.இந்நாட்டின் வாரலாற்றிலேயே முஸ்லிம் மாணவர் ஒருவர் ஆசிரய கலாசாலைக்கு அனுமதி பெறுவது இதுவே முதல் தடவையாகும்.”
இக்காலத்தில் இவர் தனது கல்விசார் நடவடிக்கைகளோடு தமிழ் மொழியாரிவிலும் சிறந்து விளங்கினார்  இதன் காரணமாகவே  அப்போது யாழில் அவருக்கு "தமிழிற் சூரியன்" என்ற பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
1925ம் ஆண்டு இலங்கையின் முதலாவது முஸ்லிம் பயிற்றப்பட்ட ஆசிரியராக கலாசாலையிலிருந்து  வெளியேறிய இவர் முதலில் காலி மல்ஹாருஷ் சுல்ஹிய வித்தியாலயத்திலும்  அதனைத் தொடர்ந்து 1928ம் ஆண்டு முதல் மாத்தறை முஸ்லிம் வித்தியாலயத்திலும் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்தார்.
பின்னர் 1935ம் ஆண்டு வெலிகாமம் முஸ்லிம் வித்தியாலயத்தில் தலைமை ஆசிரியராகப் பதவியேற்றுப்  பதினொரு வருடங்கள் கடமையாற்றினார். இவரது காலத்திலேயே இப்பாடசாலையில் எஸ். எஸ். சீ. வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டன.இதனைத் தொடர்ந்து 1946ம் ஆண்டுஇடமாற்றம் பெற்று திக்குவல்லை முஸ்லிம் வித்தியாலயத்தில் 1948ம ஆண்டு தொடக்கம் களுத்தறை முஸ்லிம் வித்தியாலயத்திலும்  கடமையற்றிய அவர்  1958ம் ஆண்டு மே மமாதம் 01ம் திகதி ஓய்வு பெற்றார்.
ஆசிரியப் பணிபுரிந்த காலத்தில் சமூக மற்றும் ஆன்மீக தொண்டு செய்வதிலும் அதிக அக்கறை செலுத்தினார்.இவரது முயற்ச்சியினால் ஜம்மியத்துல் இஸ்லாமியதுள் கைரியா சங்கம் 1942ம ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு அதன் மூலம் அப்பகுதியில் பள்ளிவாயல் ஒன்றும் கட்டப்பட்டது .
அல் ஹாஜ் அப்துல் லதீப் அவர்களின் முதலாவது நூலான "நபிகள் நாதர் முகம்மது (ஸல் ) உலக இரட்சக தூதர்" 1936ம் ஆண்டும்  இஸ்லாமிய ஆய்வு நூலான "திருக்குர்ஆனும் இயற்கையும்" 1970ம் ஆண்டும் வெளிவந்ததோடு சமூக சமயத்துறையில் சிறப்பான பங்களிப்பினை நல்கின.

இவ்வாறு முஸ்லிம் சமூகத்தின்  முதற் பயிற்ரப்பட்ட ஆசிரியர் தலைசிறந்த ஆசானாகவும் மட்டுமின்றி, இஸ்லாமிய ஆய்வாளனாகவும்,எழுத்தாளனாகவும் சமூக சேவையாளராகவும் விளங்கிய அல் ஹாஜ் அப்துல் லத்தீப் அவர்கள் 1977ம் ஆண்டு மார்ச் மாதம் 10ம் திகதி வாபத்தானார்கள். இன்னாலில்லாஹி வஇன்ன இலைஹி  ரஜியூன் அல்லாஹ் அவரையும் அவரது செவைகளையும்  பொருந்திக் கொள்வானாக.
 


0 comments:

Post a Comment

 
நாளைய தேசம் © 2013. All Rights Reserved. Design by naalaiyathesham
Top