பாத்திமித கலீபா அல் முஈஸ் என்பவரால்சிசிலியன் ஜௌஹர் என்ற தளபதியின் கீழ்   எகிப்தைக் கைப்பற்ற ஹிஜ்ரி 362 ஆம் ஆண்டு (கி.பி. 969) ஒரு படை அனுப்பப்பட்டது. அத்தளபதி எகிப்தை வென்று கெய்ரோ என்ற பெயரில் ஒரு நகரத்தைக் கட்டியெழுப்பினார். அதைத் தொடர்ந்து அல் - அஸ்ஹர் என்ற பெயரில் ஒரு பிரமாண்டமான பள்ளிவாசலையும் அங்கு அவர் கட்டினார். இப்பள்ளி வாசலைக் கட்டுவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கும்  அதிக காலம் செலவானதாக சரித்திர ஆசிரியர்கள் எழுதியுள்ளனர். இப்பள்ளிவாசல் தொழுகைக்காக உத்தியோகபூர்வமாக திறக்கப்பட்டது ஹிஜ்ரி 385 ரமழான் மாதம் ஏழாம் நாளில் ஆகும். அது முதல் உலகில் உள்ள மிக பழைமையான பள்ளிவாசல்களில் அல் - அஸ்ஹர் முதன்மையானதாகத் திகழ்ந்து வருகின்றது. 
  
அல் - அஸ்ஹர் என்ற பெயர் இதற்கு ஏன் இடப்பட்டது என்பது தொடர்பாக பல கருத்துக்கள் கூறப்படுகின்றன. இந்த பள்ளிவாசல் கட்டப்பட்ட காலக் கெடுவில் கெய்ரோவில் பல பிரமாண்டமான கட்டிடங்கள் இருந்ததானால் இப்பெயர் அதற்கு சூட்டப்பட்டு இருக்ககலாம் என்று சிலர் கூறுகின்றனர்.; மேலும் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஆலி வஸல்லம்) அவர்களின் அருமை மகள் பாத்திமா ஸஹ்ராவின் பெயரில் இரண்டாவது பகுதியை அவர்களுடைய ஞாபகார்த்தமாக இடப்பட்டது என்றும் சிலர் கூறுகின்றனர். இந்த பள்ளிவாசல் பாத்திமித் கலீபா காலத்தில் கட்டப்பட்டதால் இந்தக் கருத்திற்கு அதிக அறிஞர்கள் ஆதரவு தருகின்றனர்.

ஒரு வணக்கஸ்தளமாக ஆரம்பமான அல் - அஸ்ஹர் மூன்றரை  ஆண்டுகளில் ஒரு  பல்கலைக்கழகமாகவும் பரிணமித்தது. அத்தருனத்தில் எகிப்தை அல் முஈஸ் என்ற கவர்ணரே ஆட்சி செய்து வந்தார். இப்பல்கலைக்கழக திறப்பு விழாவின் போது சமூம் தந்திருந்த முக்கியஸ்தர்களினதும் பிரமுகர்களினதும் பெயர்கள் சரித்திர ஏடுகளில் பதிவாகியுள்ளன. இதன் ஆரம்பத்தில் 21 ஆசிரியர்களுடைய சேவையை பெறுவது என்று முடிவு செய்யப்பட்டதுடன் அவரகள்; தங்குவதற்காக விடுதிகளும் பல்கலைக்கழகத்தின் அருகிலேயே கட்டப்பட்டன. மேலும் அவர்களது ஊதியம் தொடர்பான ஏற்பாடுகளையும் கிலாபத்தே ஏற்றது. 
  
இதன் ஆரம்பத்தில் சுமார் 200 ஆண்டு காலமாக கெய்ரோவின் வரி சேகரிக்கும் அதிகாரிகளின் கூட்டங்கள் இங்கு நடைபெற்று வந்ததுடன் பிரதம கண்காய்வாளரின் அலுவலகமாகவும் அல் - அஸ்ஹர் செயற்பட்டு வந்தது. 
  
8 ஆவது மற்றும் 9 ஆவது நூற்றாண்டுகளில் மத்திய ஆசியாவில் முகலாயர்களின் ஆக்கிரமிப்பு தீவிரம் அடைந்து வந்ததுடன் அன்டிலூசியாவில் இருந்த சிறு முஸ்லிம் ராஜ்யங்கள் பலமிழக்கலாயின. அதன் போது முஸ்லிம் நாடுகளில் இருந்து வந்த  அறிஞர்களுக்கு பாதுகாப்பான புகழிடம் வழங்கக் கூடிய ஒரே பல்கலைக்கழகமாக அல் - அஸ்ஹர் திகழ்ந்து வந்தது. இந்த காலகட்டத்தில் இயற்கை விஞ்ஞானத் துறையில் பாரிய முன்னேற்றங்கள் ஏற்பட ஆரம்பித்ததுடன் அத்துறையில் அல் - அஸ்ஹரியும் முன்னணியில் இருந்தது. இந்த சமயத்தில் எகிப்தில் பாரிய அரசியல் மற்றும் கல்வித் துறை மாற்றங்கள் ஏற்படலாயின. அத்துடன் அல் - அஸ்ஹர் அறிஞர்கள் கணிதம், புவியியல், மருத்துவம், சரித்திரம் போன்ற கல்வித் துறைகளில் பெரும் புலமை பெற்றிருந்தனர். இந்த தருனத்தில் ஒட்டோமன்ட் சாம்ராஜ்யம் உருவாக ஆரம்பித்ததால் அதன் மூலம் பொது நிறுவனங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டிருந்த வக்பு முறை அல் - அஸ்ஹருக்கும் இணைக்கப்பட்டதால் அது ஒரு சுதந்திரமான கல்வி நிறுவனமாக இயங்கும் வாய்ப்பு விரிவாகியது. இதைத் தொடர்ந்து அல் - அஸ்ஹரிக்கு முன்பு என்றும் இருக்காத அளவிற்கு சுதந்திரங்கள் கிடைத்தன. இதன் மூலம் அதன் ஆசிரியர்களும் பல செயற்பாட்டு சுதந்திரங்களைப் பெற்றனர். இக்கால கட்டத்தில் இது போன்ற சுதந்திரங்கள் ஏனைய நாடுகளில் உள்ள அறிஞர் பெருமக்களுக்கு தரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே, இது போன்ற ஒப்பற்ற சுதந்திரம் ஒன்றைப் பெற்ற அல் - அஸ்ஹரின் தனித் தன்மையை ஒட்டோமன்ட் ஆட்சியளர்கள் நன்கு உணர்ந்து, தங்களில் எவரையும் இந்த பல்கலைக்கழகத்திற்கு தலைவராகவோ அல்லது மஸ்ஜிதின் தலைமை இமாமாகவோ நியமிக்காமல் இருக்கும் விடயத்தில் அவர்கள் மிகுந்த கவனம் செலுத்தி, இவ்வுயர் பதவிகளை எகிப்திலேயே பிறந்த அறபி அறிஞர்களுக்கே அவர்கள் வழங்கி வந்தனர். பிரான்ஸ் மன்னன் நெப்போலியன்  பொனபாட் எகிப்தைத் தாக்கிய தருனத்தில் (ஹிஜ்ரி 1213) இப் பல்கலைக்கழகத்திற்கு எந்தவித சேதத்தையும் ஏற்படுத்தக் கூடாது என்று அம்மன்னன் கட்டளை இட்டான். பின்னொரு காலத்தில் சாந்த ஹெலேனா தீவிட்கு அம்மன்னன் நாடு கடத்தப்பட்டிருந்த போது தன்னுடைய நாளேட்டில் தான் எகிப்தை தாக்கிய காலகட்டத்தையும் அதில் குறிப்பிட்டிருந்ததோடு அதில் அல் - அஸ்ஹர் பல்கலைக்கழகத்தை பாராட்டியும், வர்ணித்தும் எழுதியிருந்தான். அது பிரான்ஸின் சோபோன் பல்கலைக்கழகத்திற்கு சமமான உயர்ந்த ஒரு அறிவு பீடம் என அவன் அதில் வர்ணித்திருந்தான். மேலும் அதில் அல் - அஸ்ஹரின் அறிஞர்கள், ஆசிரியர்கள் பற்றியும் பிரான்ஸ் மன்னன் மிகவும் கண்ணியத்துடன் குறிப்பிட்டிருந்தான். மேலும், கெய்ரோவை கைப்பற்றிய சமயத்தில் அதன் நிர்வாகப் பொறுப்பை தன்னுடைய தளபதிகள் எவருக்கும் கொடுக்காது அல் - அஸ்ஹரின் பிரதம இமாம் அவர்களிடம் ஒப்படைத்ததன் மூலம் அல் - அஸ்ஹரின் மீது அம்மன்னன் வைத்திருந்த கௌரவம் புலனாகின்றது. இவ்வாறு அல் - அஸ்ஹரின் மீது பிற நாட்டுத் தலைவர்களும் மதிப்பும், மரியாதையும் கொண்டிருந்தனர். அது ஆக்கிரமிப்புகளின் சமயமாக இருந்த போதிலும் சரியே. 
இதே போன்று எகிப்து நாடு எதிரிகளால் ஆக்கிரமிக்கப்படும் சமயங்களில் அவர்களை விரட்டியடிக்கும் திட்டங்களை வகுக்கும் ரகசிய இடமாகவும் எகிப்தியர்கள் மத்தியில் அல் - அஸ்ஹர் பள்ளிவாசல் பிரபல்யம் அடைந்திருந்தது. முஹம்மது அல் ஸாதாத் என்பவரின் புரட்சி இயக்கம் தாபிக்கப்பட்டிருந்தது அல் - அஸ்ஹரில் ஆகும். 
எகிப்தை பிரான்ஸ் ஆக்கிரமித்த பின்ப அதற்கு எதிராக போராட்டங்கள் ஆரம்பமான போது அல் - அஸ்ஹர் கட்டிடங்களுக்கு சேதங்கள் ஏறப்படாமல் இருக்க அதை மூடி விடுவது என்று அதன் நிர்வாகம் தீர்மானித்ததால் அல் - அஸ்ஹர் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் உத்தியோக பூர்வமாக மூடப்பட்டிருந்தது. இப் பல்கலைக்கழகத்தின் சுமார் 100 ஆண்டு சரித்திரத்தில் அது மூடப்பட்டு இருந்தது இந்த இரு ஆண்டுகளில் மாத்திரமே. ஆக்கிரமிப்பாளர்கள் எகிப்தை விட்டு  விரட்டி அடிக்கப்பட்டதுடன் பல்கலைக்கழகம் பரிபூரணமாக செயல் பட ஆரம்பித்தது. அதைத் தொடர்ந்து எகிப்து மாத்திரம் அல்லாது பிற நாடுகளில் இருந்தும் மாணவர்களை இணைத்துக் கொள்ளும் செயற்பாடு மீண்டும் தடையின்றி ஆரம்பமாயிற்று. 

கி.பி. 1805 ஆம் ஆண்டில் எகிப்தை ஆட்சி செய்த முஹம்மத் அலி என்ற கலீபா எகிப்தை ஒரு சிறந்த நாடாக உயர்த்துவதாக உறுதி பூண்ட போது அதற்கான ஒத்துழைப்பை அவர் வேண்டி நின்றது அல் - அஸ்ஹர் அறிஞர்களிடம் இருந்தே. கடந்த சில ஆண்டுகளாக ஆக்கிரமிப்புகளின் காரணமாக எகிப்தில் உள்ள சகல துறைகளிலும் ஏற்பட்ட நிர்வாகத் தடைகளின் காரணமாக ஆய்வு நடவடிக்கைகளின் அல் - அஸ்ஹரிலும் பாரிய பின்னடைவு ஏற்பட்டிருந்ததை அறிஞர்களுடன் கலந்து ஆலோசித்த போது முஹம்மது அலி கண்டு கொண்டதால் அல் - அஸ்ஹர் மாணவர்களையும், ஆசான்களையும் ஐரோப்பிய கண்டத்திற்கு அனுப்பி அங்குள்ள கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆய்வுகூடங்கள் பெற்றிருந்த புதிய விஞ்ஞான அறிவுகளை பெற்று வர கலீபா ஏற்பாடு செய்தார். இவ் அறிவுகளை தமது நாட்டிற்கு எடுத்து வரும் பொறுப்பை எகிப்தில் உள்ள ஏனைய கல்வி நிறுவனங்களிம் ஒப்படைக்காது, அல் - அஸ்ஹர் ஆசிரியர்களுக்கும் முன்னணி மாணவர்களுக்கும் அதற்கான வாய்ப்பை  தான் அளித்ததன் மூலம் சிறந்த ஒரு முடிவை தான் எடுத்ததை கலீபா வெகுவிரைவில் உணர்ந்து கொண்டார். 
  
இது தவிர எகிப்தை எவரேனும் ஆக்கிரமிக்கும் சகல சந்தர்ப்பங்களிலும் அம் முயற்சிகளை முறியடிக்கும் அல்லது எதிரிகளை விரட்டி அடிக்கும் கைங்கரியத்தில் முக்கிய இடத்தைப் பெறுபவர்களாக அரச அதிகாரிகளை விட அல் - அஸ்ஹரின் ஆசான்களும் மாணவர்களுமே முன்னணியில் திகழ்ந்து வந்துளள்னர். 

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
நாளைய தேசம் © 2013. All Rights Reserved. Design by naalaiyathesham
Top