இலங்கைத் தீவானது அதன் வனப்பு, புவியியல் அமைவு,மற்றும் காலநிலைப் பல்வகைத்தன்மை, போன்ற காரணிகளால் அன்றும் இன்றும் உலகின் பல்வேறு ஆட்சியாளர்களின் கவனத்தை ஈர்க்கின்றதொரு விசித்திரம் மிக்க நாடாக அமைந்துள்ளது. இவ்வாறு சிறப்பு மிக்க எம் நாட்டை கி.பி.1505லிருந்து போர்த்துக்கேயரும், கி.பி.1658ல் ஒல்லாந்தரும், கி.பி1815இலிருந்து பிரித்தானியரும் தம் வசப்படுத்தி ஆட்சியை மேற்கொண்டனர் மக்களை பல்வேறு வகையிலும் அடிமைத்தனங்களுக்கு உள்ளாக்கிக்கினர், குடிமக்களைப் பாரபட்சமின்றி அழித்தும் வந்தனர். இந்நிலமைகளில் மக்கள் சிங்களவர், தமிழர், முஸ்லிம் என்று வேறுபாடின்றி நாட்டிற்க்காக ஒன்றிணைந்து போராடி வந்தனர். தொடர்ச்சியான முயற்சிகளும் செயற்பாடுகளுமே 1948-02-04 யில் சுதந்திரத்தை பெறுவதற்கு வழி சமைத்ததாக அமைந்தது
சுதந்திர போராட்ட வீரர் சம்மாந்துறை தளபதி அபூபக்கர் ஈஸா முகாந்திரம்
பல்லாயிரமாண்டு வரலாற்றைக் கொண்ட எம் இரத்தினதுவீபமானது பூலோகத்தின் சுவனபுரியாக வர்ணிக்கப்படுகின்றது. தொன்று தொட்டு பல்லின மக்கட்பல்வகைமை நிலவும் இந்நித்திலத்தில் இவர்களின் சகவாழ்வும் அந்நியோன்னியமும் பரஸ்பர உறவுகளாகவே காணப்பட்டது
ஆனால் எம் சுதந்திர உறவிலும் நிலத்திலும் கி.பி.1505 இலிருந்து ஐரோப்பிய ஆக்கிரமிப்புக் கறைகள் படியத் தொடங்கின. இவ் ஆக்கிரமிப்பாளர்கள் தங்களின் பொருளாதார மற்றும் சுயலாபங்களுக்காக இனங்களுக்கிடையில் முறுகல்களை ஏற்படுத்துவதையும், பிரித்தாளும் இராஜதந்திரங்களுடாகவும் தங்களின் கைங்கரியத்தையும் வெகு இலாவகமாக பயன்படுத்தினர். இக்கால கட்டத்தில் நாட்டைக் காக்கும் பணியில் சிங்களவர், தமிழர்.முஸ்லிம்கள் அனைவரும் இலங்கையர் என்ற அடையாளத்துடன் தம் மன்னர்களுடன் இணைந்து அந்நியரை எதிர்த்தனர்.
ஏறத்தாள 4 நூற்றாண்டுகள் இலங்கையின் வரலாற்றில் பெரும் விளைவுகளை ஏற்படுத்திய போர்த்துக்கேய ஒல்லாந்த ஆங்கிலேய ஆக்கிரமிப்புகளிலிருந்து 1948ம் வருடம் பெப்ரவரி 4ம் திகதி எம் நாடு சுதந்திரம் பெற்றது. இவ்வாறான ஒரு காலத்தில் (கி.பி1804) பிரித்தானியர் நாட்டைக் கைப்பற்றிக் கொண்டிருக்கம் வேளையில் ஓந்தாச்சிமடம் என்ற இடத்தில் பிரித்தானியப் படைகள் முன்னேற முயற்சித்துக் கொண்டிருந்தன. கண்டி மன்னனுக்கு விசுவாசமான பிரஜைகள் அவர்களின் முன்னேற்றத்தை முறியடித்து அவர்களைத் தடுத்து நிறுத்தினர். இதனால் பிரித்தானிய அரசு குறித்த இடத்தில் படைகளை தடுத்த 169பேரையும் பிரித்தானிய அரசின் தேசதுரோகிகளாக 1804-06-04ம் திகதி பிரகடனப்படுத்தியது
அவர்கள் பிரித்தானியருக்கு தேசதுரோகிகளாக இருக்கலாம் ஆனால் எம் நாட்டின் ஐக்கியத்தில் அவர்கள் தேசிய வீரர்களே. அவர்களுள் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த முக்கியமான ஏழு முஸ்லிம்களுள் சம்மாந்துறை அபூபக்கர் ஈஸா முகாந்திரமும்ஒருவர். என்பதை நினைத்து ஒவ்வொரு சம்மாந்துறை மகனும் பெருமிதம் கொள்ள வேண்டும். குறித்த நபர்கள் 1804-09-01ம் திகதிக்கு முன்னர் பிரித்தானியப் படைகளிடம் சரணடையாவிட்டால் அவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று பிரித்தானிய அரசின் பிரதான செயலாளர்றொபேர்ட் அர்பேத் றோட்அறிவித்திருந்தார். இவர்களின் தீவிரத் தன்மையும் தேசப்பற்றும் பிரத்தானியருக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியது தளபதி அபூபக்கர் ஈஸா முகாந்திரம் இறுதிவரை பிரித்தானியரிடம் அகப்படவில்லை. இதனால் அவருடைய முழுச் சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டன. என்ற ஒரு செய்தியும்,  இவர் உமறுலெப்பை போடி உடையாரின் காலத்தில் வாழ்ந்தவரென்றும், தாவள முகாந்திரத்தின் சகோதரராக இருந்திருக்க வாய்ப்புக்கள் உள்ளதாகவும் அறியக்கிடைக்கின்றது. தவிர வேறு தகவல்களை அறியமுடியவில்லை. புதிய தகவல்கள் கிடைக்குமிடத்து இன்னு மொரு பதிவிடப்படும் இன்ஷா அல்லாஹ்.
இலங்கையின் கிழக்கப் பகுதியில் பிரித்தானியரை எதிர்த்து, தனது உடமைகளையும் துச்சமெனக்கருதி தேசப்பற்றில் சிறந்து விளங்கிய இவ்வுன்னத வீரரை  நினைவு கூர்வதில் சம்மாந்துறை என்றும் பெருமிதம் கொள்கின்றது.
தன் தாயிலும் பிறந்த தன்நாட்டிலும் நேசமில்லாதவன் நெஞ்சமில்லாதவனே
துணைநின்றவை
ஈழத்தின் இன்னுமொரு மூலை
செவ்வி- அல்ஹாஜ் எஸ்.எச் அப்தல் றாஸிக் (ஓய்வு பெற்ற அதிபர்)
வாழும் கலை இலக்கிய வட்டம் 65வது சுதந்திர தின வாழ்த்து மடல்
தொகுப்பு-சாக்கீர்
http://sammanthuraisun.com/?p=2444


0 comments:

Post a Comment

 
நாளைய தேசம் © 2013. All Rights Reserved. Design by naalaiyathesham
Top