யாக்கூப் அப்துல் ரஸ்ஸாக்  மேமன் 1962 சூலை 30 இல்  மும்பையின் பைகுல்லா என்ற இடத்தில்பிறந்தார். வளர்ந்த இவர் அங்குள்ள அந்தோனியோ டி'சோவ்ஸா  உயர் பள்ளியில் கல்வி கற்றார். புர்கானி வர்த்தக, கலைக்கல்லூரியில் வர்த்தகத்தின் முதுகலைப் பட்டம் பெற்ற அவர் . 1986 இல் மேமன் இந்தியப் பட்டயக் கணக்கறிஞர்கள் கழகத்தின் உறுப்பினராய் சேர்ந்து 1990 இல் பட்டயக் கணக்காளராக வெளியேறினார்.

1991 இல் தனது நண்பர் சேட்டன் மேத்தா என்பவருடன் இணைந்து 'மேத்தா அண்ட்  மேமன் அசோசியேட் ' என்ற கணக்காளர் நிறுவனத்தை ஆரம்பித்தார். அடுத்த ஆண்டில் இருவரும் பிருந்தனர். மேமன் தனது தந்தையின் பெயரில் 'ஏ.ஆர் அண்ட்  சன்ஸ் ' என்ற நிருவனத்தை ஆரம்பித்தார். அத்துடன் 'தெஜ்ராத் இன்டர்நேசனல்' என்ற நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து மத்திய கிழக்கு நாடுகளுக்கும் இறைச்சி ஏற்றுமதி செய்து வந்தார்.

 இதேவேளை மார்ச் 12, 1993 மும்பையில் ஓர்  குண்டுத்  தாக்குதல் இடம்பெற்றது. இத்தாக்குதலில் சுமார் 250 பேர்  உயிரிழந்ததோடு  700 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதல் பாபர் மசூதி இடிப்புக்கான எதிர்தாக்குதலாகவும்  தாவூத் இப்ராகிமின் டி-கம்பெனி என்ற அமைப்பே இதனை நடத்தினர் என்றும்    இந்திய அரசுகுற்றம் சாட்டியது. இக்குற்றச்சாட்டின் இந்தியப் புலனாய்வுத் துறையினர் தாவூத் இப்ராகிமின் டி-கம்பனியின்  முக்கிய உறுப்பினரான  யாகூப் மேனனின் சகோதரர் டைகர்(இப்ராகிம் ) மேனினை இத்தாக்குதலுக்கான சூத்திரதாரியாக அறிவித்து  அவரின் செயற்பாடுகளை புலனாய்வுக்கு உற்படுத்தினர்.

இந் நடவடிக்கையின் போது யாகூப் மேனின் தனது சகோதரனுக்கு உதவி நிமித்தம் செய்த   வாங்கிப்  பணப்பரிமாற்றங்களை  காட்டி மும்பைத் தாக்குதலில் இவருக்கும் பங்குள்ளதாக அறிவித்தது.இதனையடுத்து இத்தாக்குதில் தனக்கு எச்சம்பந்தமும் இல்லை என்பதனை தெளிவுபடுத்துவதற்காக 1994 ஜூலை மாதம், தனது பெற்றோர், மனைவி மற்றும் கைக்குழந்தையோடு கராச்சியிலிருந்து வந்து சரண் அடைந்தார். இந்திய அரசோ  யாகூப் மேமனை நேபாளத்தில் ஜூலை 24ம் திகதி  கைது செய்ததாகவும் ஆகஸ்ட் 5ம் திகதி புது டில்லி புகையிரத நிலையத்தில் கைது செய்ததாகவும் ஒன்றுக்குக்கு  செய்தி வெளியிட்டதோடு குற்றவாளிய சிறையில் அடைத்தது.நீதிபதி பீ.டீ.கோதே 27ம் திகதி  ஜூலை மாதம் 2007ம் ஆண்டு  தடா  சட்டத்தின் கீழ் மரணதண்டனை தீர்ப்பு வழங்கினார். இத்தீர்ப்பானது பல மேல்முறையீடுகள் கருணை மனுக்கள் தாண்டி 2015ம் ஆண்டு ஜூலை 29ம் திகதி  உச்சநீதி மன்றால் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது.இன்று  2015 ஜூலை 30ம் திகதி காலை 6.30 அதாவது அவரது 53வது பிறந்த தினமன்றே தூக்கிலிடப்பட்டார்.அதனோடு பாரத நீதியும் கொலைசெய்யப்பட்டது. இன்னா லில்லாஹி  வஇன்னா இலைஹி ராஜியூன்.




0 comments:

Post a Comment

 
நாளைய தேசம் © 2013. All Rights Reserved. Design by naalaiyathesham
Top