கேகாலை மாவட்டத்திற்குள் குற்றங் கள் பல புரிந்தவர்கள் என்ற குற்றச் சாட்டின் பேரில் தீகிரி கேவகே சரதியல் உட்பட்ட குற்றவாளிகள் கும்பலை கைது செய்வதற்கு 1863ம் ஆண்டு ஆட்சி செய்த ஆங்கிலேயர்களினால் பொலிஸ் அமைப்பு ஒன்று நிறுவப்பட் டது. அதன் பின்னர் சரதியலினால் தான் கைதாவதை தடுப்பதற்கு பல்வேறு உபாயங்கள் மேற்கொள்ளப்பட்டது. அதன் பிரகாரம் தனக்கு வேண்டிய வர்களின் வீடுகளில் நாட்களை கழித் துக் கொண்டிருக்கையில் 17.03.1864ம் திகதி அன்று பிரதான பொலிஸ் கொன்ஸ்தாபல் அகமத் என்பவரை தலைவராகக் கொண்ட பொலிஸ் குழு அப்பிரதேச மக்களின் ஒத்துழைப்புடன் சரதியல் ஒழிந்திருந்த வீட்டைச் சுற்றிவளைத்த போது சரதியலின் குழுவினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஜோர்ஜ் வன் ஹோட் என்பவர் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டார்.
அத்துடன் அவர்களுடன் இருந்த முத்துசாமியும், கிறிஸ்தியான் அப்பு என்பவரும் பலத்த காயங்களுக்கு ஆளாகியதுடன் மேலும் இருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகினர். அத்தருண த்தில் சரதியலும் அவருடன் இருந்த பிம்மலே மரிக்கார் என்பவரும் தப்பித்து விட்டார்கள்.
அதன் பின்னர் பொலிஸ் சார்ஜன்ட் மஹத் பொலிஸ் கொன்ஸ்தாபல் துவான் முஹமத் சபான் அடங்கிய அலுவலர் குழு. சிரிமலா என்னும் பெயருடைய தகவலாளர் வழங்கிய தகவலின் அடிப்படையில் சரதியலை கைது செய்வதற்காக 21.03.1864 திகதியன்று புறப்பட்டார்கள். மேற்கூறப்பட்ட தகவலுக்கேற்ப மாவ னல்லை அப்துல் காதரின் வீட்டை சுற்றி வளைத்து சோதனை செய்யும் போது வீட்டின் மேல் மாடியில் இருந்த சரதியல் சார்ஜன்ட் மஹத்தை சுடுவதற்கு முயற்சிக்கும் தறுவாயில் சார்ஜன்ட் மஹத் உடனடியாக சரதியலை சுட்டதன் காரணமாக பல்கனியில் இருந்த சரதியல் நிலத்தில் வீழ்ந்தான். இந்த நேரத்தில் சரதியலின் குழுவின் உறுப்பினர்களில் ஒருவனான மம்மலே மரிக்கார் பல்கனியிலிருந்து வைத்த துவக்கு சூட்டில் பொலிஸ் கொன்ஸ்தாபல் துவான் முஹமத் சபான் கொல்லப்பட்டார். கடமையில் ஈடுபட்டிருக்கும் போது பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கொல்லப்பட்ட முதல் சம்பவம் இதுவாகும். இதன் பின்னர் வீரமரண மெய்திய பொலிஸ் வீரர்களின் பெயர் பட்டியலில் இச்சம்பவம் முதலா வதாக இடம்பெற்றது. 21.03.1964ம் திகதி கடமையின் போது உயிரை தியாகம் செய்த அமரர் கொன்ஸ்தாபல் துவான் முஹமத் சபானின் நினைவாக மார்ச் 21ம் நாளை பொலிஸ் வீரர்கள் நினைவு கூரும் நாளாக பொலிஸ் திணைக்களம் பிரகடனப்படுத்தியுள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.