1975ஆம் ஆண்டு முத­லா­வது உலக கிண்­ணத்தில் டெஸ்ட் அந்­தஸ்தைப் பெறாத நிலையில் காணப்­பட்ட இலங்­கை­யானது மேற்­கிந்­தியா, அவுஸ்­தி­ரே­லியா, பாகிஸ்தான் ஆகிய அணிகள் பங்கேற்­றி­ருந்த குழு ”பி” இல் உள்­வாங்­கப்­பட்­டி­ருந்­தது. இத்தொ­ட ரில்  குழு நிலையில் நடை­பெற்ற மூன்று போட்­டி­க­ளிலும் தோல்­வி­யுற்று வெளியே­றி­யது.
அதனைத் தொடர்ந்து 1979ஆம் ஆண்டும் குழு ”பி”இல் இடம்­பெற்­றி­ருந்த இலங்கை முதற்­சுற்­றோடு வெளியே­றி­யது. எனினும் இத் ­தொ­டரில் இங்­கி­லாந்தின் மன்­செஸ்­டரில் இடம்­பெற்ற இந்­தி­யா­வுக்கு எதி­ரான போட்­டியில் வெற்றி பெற்று உலக கிண்­ணத்­தொ­டரில் தனது முதல் வெற்­றியை இலங்கை பதிவு செய்­தது.
அதற்­க­டுத்­த­தாக 1983இல் குழு ”ஏ” இல் கள­மி­றங்­கிய இலங்கை போர­ாடிய போதும் ஆறு போட்­டி­களில் ஒன்றில் மட்­டுமே வெற்றி பெற்­றி­ருந்­ததால் முதற்­சுற்­றுடன் வெளியே­ற­வேண்­டி­யி­ருந்­தது.
தொடர்ந்து 1987இல் எதிர்­பார்ப்­புக்­க­ளுடன் உலக கிண்ணத் தொடரில் கலந்து கொண்ட இலங்கை குழு ”பி” இல் இடம்­பெற்­றி­ருந்­தது. 6 முதற்­சுற்று ஆட்­டங்­களில் கலந்து கொண்ட இலங்கை அனைத்­தி லும் தோல்­வி­யுற்று மீண்­டு­மொ­ரு­ த­டவை முதற்­சுற்­றுடன் வெளி யே­றி­யது.
அதனைத் தொடர்ந்து 1992ஆம் ஆண்டு உலக கிண்­ணத் தில் அர­விந்த டி சில்வா தலை­மை யில் சென்­றி­ருந்த இலங்கை எட்டு போட்­டி­களில் பங்­கெ­டு த்து இரண்டு போட்­டி­களில் மட்­டுமே வெற்றி பெற்று எட்­டா­வது இடத்தை தக்­க­வைத்­துக்­கொண் ­டது.
1996 இல் தடம்­ப­தித்த இலங்கை
இலங்கை, இந்­தியா, பாகிஸ்தான் ஆகிய ஆசிய நாடுகள் கூட்­டாக இணைந்து நடத்­திய இத்­தொ­டரில் வில்ஸ் கிண்ணம் என அழைக்­கப்­பட்ட உலக கிண்­ணத்தை கைப்­ பற்­று­வ­தற்­காக அர்­ஜுன ரண­து ங்க தலை­மை­யி­லான இலங்கை குழாமில் அரவிந்த.டி.சில்வா (உப தலைவர்), ரொஷான் மகா­நாம, சனத் ஜய­சூ­ரிய, அசங்­க­ கு­ரு­சிங்க, ஹஷான்­ தி­ல­க­ரட்ன, ரொமேஷ் களு­வி­த்தாரன, குமார் ­தர்­ம­சேன, சமிந்­த வாஸ், பிர­மோ­த­ய ­விக்­கி­ர­ம­சிங்க, முத்­தையா முர­ளி­தரன், ரவீந்­தி­ர ­புஷ்­ப­கு­மார, மாவன் அத்­த­பத்து, உபுல் ­சந்­த­ன­ ஆ­கியோர் இடம்­பெற்­றி­ருந்­தனர்.
துலிப் மெண்டிஸ் அணியின் முகா­மை­யா­ள­ரா­கவும் பயிற்­சி­யா­ள­ராக டேவிட் வட்­மோரும் செயற்­பட்­டி­ருந்­தமை விசே­ட­மா­ன­தாகும்.
1996 இல் உலகக் கிண்­ணத்­திற்கு முன்­ன­தாக இடம்­பெற்ற ஒரு நாள் தொடர்­களில் ஆதிக்கம் செலுத்தி வந்த இலங்கை மீது இம்­முறை உலக்­கிண்­ணத்தை கைப்­பற்­று­வ­தற்கு அதிக வாய்ப்­புக்கள் இல்­லா விட்­டாலும் அரை­யி­று­தி­வ­ரை­யி­லா­வது செல்லும் என்ற ஆரு­டங் கள் கூறப்­பட்டு வந்­தது.
இந்­நி­லையில் குழு ”ஏ”யில்­ இ­லங்கை இடம்­பெற்­றி­ருந்­தது. முத­லா­வது கால் இறுதிப் போட்­டியில் இங்­கி­லாந்தைச் சந்­தித்த இலங்கை அவ்­வ­ணியை ஐந்து விக்­கட்­டுக்­க­ளினால் வெற்­றி­பெற்று அரை­யி­று­திக்குள் முதற்­த­ட­வை­யாக நுழைந்­தது.
முத­லா­வது அரை­யி­று­திப்­போட்டி இலங்கை, இந்­திய அணி­க­ளுக்­கி­டையில் ஈடன் கார்டன் மைதா­னத்தில் நடை­பெற்­றது. முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய இலங்கை எட்டு விக்­கட்­டுக்­களை இழந்து 251 ஓட்­டங்­களைப் பெற்­றது.
பதி­லுக்கு இந்­தியா 34.1 ஓவர்­களில் எட்டு விக்கட் இழப்­பிற்கு 120 ஓட்­டத்­ தி­னையே பெற்­றது. இப்­போட்­டியில் இலங்கை அணி 130 ஓட்­டங்­க­ளினால் வெற்­றி­பெற்று முதற்­த­ட­வை­யாக இறு­திப்­போட்­டிக்குத் தெரி­வா­னது.
பலம்­பொ­ருந்­திய அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு எதி­ரான தீர்க்­க­மான இறு­திப்­போட்டி பா­கிஸ்தான் லாகூர் நகரில் அமைந்­துள்ள கடாபி ஸ்டேடி­யத்தில் பகல் – இரவு ஆட்­ட­மாக நடை­பெற்­றது.
நாணயச் சுழற்­சியில் வெற்­றி­ பெற்ற பெற்ற இலங்கை அணித்­த­லைவர் அர்­ஜுன அவுஸ்­தி­ரே­லிய அணி­யினை முதலில் துடுப்­பெடுத்தாடும்படி பணித்­தார்.
கடந்த ஐந்து உலகக் கிண்ண இறுதிப் போட்­டி­க­ளிலும் முதலில் துடுப்பெடுத்தாடிய அணியே வெற்­றி­பெற்­றி­ருந்­தது. அத்­துடன் இரவு பகல் ஆட்டம் வேறு.
இந்­நி­லையில் நாண­யச்­சு­ழற்­சியில் வெற்றி பெற்ற இலங்கை அணித்­த­லைவர் அர்­ஜு­னவின் தீர்­மானம் குறித்த பலத்த வினா­வெ­ழுந்­த­து டன் அதி­க­மாவும் பேசப்­பட்­டது.
அந்­நி­லையில் முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய அவுஸ்­தி­ரே­லியா 50 ஓவர்­களில் 241 ஓட்­டங்­களைப் பெற்­றது. மார்க்­ டெ­யிலர் 74 ஓட்­டங்­க­ளையும், ரிக்­கி­பொண்டிங் 43 ஓட்­டங்­க­ளையும் பெற்­றனர். பந்­து­வீச்சில் அர­விந்த டி சில்வா 42 ஓட்­டங்­க­ளுக்கு 3 விக்கட்­டுக்­களைக் கைப்­பற்­றினார்.
242 ஓட்­டங்­களை வெற்றி இலக்­காக கொண்ட இலங்கை தமது பதில் துடுப்­பாட்­டத்தை ஆரம்­பித்­தது. போட்டி ஆரம்­பித்து 6 ஓவ ர்கள் முடி­வ­தற்கு முன்­பாக தமது ஆரம்ப அதி­ரடி துடுப்­பாட்ட வீரர்கள் இரு­வ­ரையும் இலங்கை இழந்­தது.
சனத் ஜய­சூரிய 7 பந்­து க­ளுக்கு முகங்­கொ­டுத்து 9 ஓட்­டங்­க­ளு­டனும், களு­வித்­த­ாரண 13 பந்­து­க­ளுக்கு முகங்­கொ­டுத்து 6 ஓட்டங்­க­ளு­டனும் ஆட்­ட­மி­ழந்­தனர். 2வது விக்­கட்டை இழக்­கும்­போது அணி 23 ஓட்­டங்­க­ளையே பெற்­றி­ ருந்­தது.
இருப்­பினும் அசங்க குரு­சிங்க, அர­விந்த டி சில்வா இரு­வரும் அணியின் ஓட்ட எண்­ணிக்­கை­யினை 148 வரை அதி­க­ரித்­தனர். 31ஆவது ஓவரில் குரு­சிங்க ஆட்­ட­மி­ழந்­தார்.
இதைத் தொடர்ந்து அர்­ஜுன, அர­விந்த வெற்றி இலக்கை 46.2ஆவது ஓவரில் அடைந்­தனர். 1996 வில்ஸ் உலகக் கிண்ணத்தை 7 விக்­கட்­டுக்­க­ளினால் வெற்­றி­பெற்ற இலங்கை 7ஆவது உலக கிண்­ணத்தை தன்­வ­சப்­ப­டுத்­தி­யது.
இறுதிப் போட்­டியின் ஆட்ட­நா­ய­க­னாக ஆட்­ட­மி­ழக்­காது 107 ஓட்­டங்­களைப் பெற்ற அர­விந்த டி சில்வா தெரிவு செய்யப்பட்டார். போட்­டித்­தொ­டரின் சிறப்­பாட்­டக்­கா­ர­ராக சனத் ஜய­சூ­ரிய தெரிவு செய்­யப்­பட்டார்.
இறு­திப்­போட்­டியில் நடு­வர்­க­ளாக ஸ்டீவ் பக்னர் (மேற்­கிந்­தியா) டேவிட் செப்பல் (இங்­கி­லாந்து) ஆகி­யோரும், 3ஆவது நடுவராக தென்­னா­பி­ரிக்­காவைச் சேர்ந்த கிரில் மிச்­சியும் கடமை புரிந்­தனர்.
போட்டி மத்­தி­யஸ்­த­ராக (இறுதித் தீர்­மா­னத்­துக்­கு­ரிய அதி­காரம் பெற்­ற­வ­ராக) கிளைவ் லொயிட் (மே.இந்­தியா) கடமையாற்றி­யி­ருந்­த­மையும் குறிப்­பி­டத்­தக்­கது.
இந்த வர­லாற்று சாத­னையை நிகழ்த்­திய இலங்கை 1999ஆம் ஆண்டு உலக கிண்­ணத்­தொ­டரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டபோதும் முதற்­சுற்­று­டனே வெளியே­றி­யி­ருந்­தது.
தொடர்ந்து ஆபி­ரிக்க கண்­­டத்தில் முதற்­த­ட­வை­யாக 2003இல் நடை­பெற்ற 8 ஆவது உலகக் கிண்­ணத்­தொ­டரில் அரையிறுதிவரை சென்­றி­ருந்த இல ங்கை அவுஸ்­தி­ரே­லி­யா­வுடன் டக்­வேர்த்­ லூயிஸ் முறையில் தோல்­வி­யுற்று வெளியேறி­யி­ருந்­தது.
தொடர்ச்­சி­யாக இரண்டு ஏமாற்­றங்கள்
2007ஆம் ஆண்டு மேற்­கிந்­தி­யா வில் நடை­பெற்ற 9ஆவது உலக கிண்­ணத்­தொ­டரில் குழு ”பி” இல் இடம்­பெற்ற மஹேல ஜயவர்த்­தன தலை­மை­யி­லான இலங்கை முதற்­சுற்றில் அனைத்­துப்­போட்­டி­க­ளிலும் வெற்றி பெற்­றி­ருந்தது.
அரை இறு­தியில் நியூ­ஸி­லாந்தை 81ஓட்­டங்­களால் வெற்றி பெற்ற இலங்கை இறு­திப்­போட்­டியில் அவுஸ்­தி­ரே­லி­யாவைச் சந்­தித்­தது.
1996இல் இலங்­கை­யிடம்  கிண்­ணத்தைப் பறி­கொ­டுத்­தி­ருந்த அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு ஆரம்­பத்­து­டுப்­பாட்ட வீரர் அடம்­ கில்­கிறிஸ்ட் (149 ஓட்­டங்கள்) அபார துடுப்­பாட்­டத்­தாண்­டவம் இலங்­கையின் உலகக் கிண்­ணக்­க­னவை சித­ற­டையச் ­செய்­ய­தது, இறுதியில் அவுஸ்­தி­ரே­லியா டக்­வோர்த்­ லூ யிஸ் முறையில் 53ஓட்­டங்­களால் வெற்றி பெற்­றது. இதனால் மீண்­டு­மொரு தடவை உலகக் கிண்­ண த்தைக் கைப்­பற்றும் இலக்கு தவ­றிப்­போ­னது.
அடுத்து 2011இல் இந்­திய, இலங்கை, பங்­க­ளாதேஷ் ஆகிய நாடுகள் கூட்­டாக இணைந்து நடத்­திய 10ஆவது உலக கிண்ணத்தில் குழு ”ஏ” இல் இடம்­பெற்­றி­ருந்த குமார் சங்­க­க்கார தலை­மை­யி­லான இலங்கை குழு நிலையில் நான்கு வெற்றி­க­ளுடன் மீண்­டு­மொரு தட வை நியூ­ஸி­லாந்தை அரை இறு­தியில் சந்­தித்து ஐந்து விக்­கெட்­டுக்­களால் வெற்­றி­பெற்றது.
இறு­திப்­போட்­டியில் போட்­டி யை நடத்­திய நாடு­களில் ஒன்­றான இந்­திய அணியை அதன் சொந்த மண்ணில் இலங்கை சந்தித்­தது. இப்­போட்டியில் இலங்­கையின் கிண்ண இலக்கை இறு­தி­நே­ரத்தில் அதி­ர­டி­யாக துடுப்­பெ­டுத்­தாடி 91 ஓட்­டங்­களைப் பெற்ற இந்­தியா அணித்­த­லைவர் டோனி சித­ற­டித் தார்.
ஆறு விக்கெட் வித்­தி­யா­சத் தில் இலங்­கையை வீழ்த்­திய இந்­திய 28ஆண்­டு­க­ளுக்கு பின்னர் மீண்டும் உலகக் கிண்­ணத்தைக் கைப்­பற்றி சாதிக்க இலங்­கைக்கு இரண்­டா­வது தட­வை­யா­கவும் உலகக் கிண்­ணத்தை இழந்த ஏமா ற்றம்.
ஆஸி.கண்­டத்தில் சாதிக்க காத்­தி­ருக்கும் சிங்­கங்கள்
இவ்­வா­றான வர­லாற்று தடங்­க­ளுடன் இம்­முறை அவுஸ்­தி­ரே­லியா மற்றும் நியூ­ஸி­லாந்தில் நடை­பெ­ற­வுள்ள 11ஆவது உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை அணி பங்­கேற்­கின்­றது.
அவுஸ்­தி­ரே­லியா, நியூ­ஸி­லாந்து, இங்­கி­லாந்து போன்ற பல­மான அணி­களும் பங்­க­ளாதேஷ், ஸ்கொட்­லாந்து, ஆப்கானிஸ்தான் போன்ற திடீர் அதிர்ச்­சி­களை வழங்கும் அணி­களும் பங்­கேற்­றுள்ள குழு ”ஏ” இல் இல ங்கை இடம்­பெற்றுள்ளது.
அஞ்­சலோ மெத்யூஸ் தலை­மை யில் தில­க­ரட்ன டில்ஷான், குமார் சங்­கக்­கார, மஹேல ஜெய­வர்த்­தன, லஹிரு திரி­மன்னே, தினேஷ் சந்­திமல், திமுத் கரு­ணா­ரட்ன, ஜீவன் மெண்டிஸ், திஸர பெரேரா, சுரங்க லக்மால், லசித் மலிங்க, துஷ்­மந்த சமீர, நுவான் குல­சே­கர, ரங்­கன ஹேரத், சசித்ர சேன­நாயக்க ஆகியோர் மீண்டும் தாய்­நாட்­டுக்கு உலகக் கிண்­ணத்தைக் கொண்­டு­வ­ரு­தற்­காக களங்­களில் போரா­ட­வுள்­ளனர்.



நன்றி இலக்கிய இன்போ 

0 comments:

Post a Comment

 
நாளைய தேசம் © 2013. All Rights Reserved. Design by naalaiyathesham
Top