உலக கிண்ண ஒரு நாள் கிரிக்கட் போட்டிகள் ஒவ்வொரு நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடாத்தப்பட்டு வருகிறது. உலகளவில் எதிர்பார்க்கப்படும் விளையட்டு நிகழ்வாக உலக கிண்ண ஒரு நாள் கிரிக்கட் போட்டிகள் கருதப்படுகின்றது.
முதலாவது உலக கிண்ண போட்டிகள் இங்கிலந்தில் 1975ம் ஆண்டு நடை பெற்றது. இதுவரை அவுஸ்ரேலியா, மேற்குஇந்திய தீவுகள், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய ஐந்து நடுகள் கிண்ணத்தை வென்றுள்ளன.
முந்தைய நாட்களில் அவுஸ்ரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே கிரிக்கட் போட்டிகள் நடைபெற்று வ்ந்தன. 1877 இல் முதலாவது அஷெச் போட்டி நடைபெற்றது. பன்னிரண்டு ஆண்டுகளின் பின் தென் ஆபிரிக்கா கலந்துகொண்டது. முதலாவது ஒரு நாள் போட்டிகள் நடைபெற்றது அவுஸ்ரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபொற்ற போட்டிகள் மழையினாள் பாதிக்கப்பட்டமையாள் கடைசி நாள் நாற்பது போட்டியாக நடாத்தப்பட்ட்து. ஆனால் இங்கிலாந்தின் பிராந்தியங்களில்1960 இல் இருந்து ஒரு நாள் போட்டிகள் நடைபொற்று வந்தன.

இப்போட்டிகள் பிரபெல்யம் அடைந்த்தை தொடர்ந்து ஐசிசி ஆல் 1975 இல் இங்கிலாந்தில் முதலாவது போட்டிநடாத்தப்பட்ட்து. மேற்குஇந்திய தீவுகள் முதலாவது சம்பியன் பட்ட்தை வென்றது அத்துடன் இரண்டாவது உலக கிண்ணதையும் மேற்குஇந்திய தீவுகளே கைப்பற்றியது. மூன்றாவது உலக கிண்ண தொடரில் மேற்குஇந்திய தீவுகளை தோற்கடித்து இந்தியா கிண்ணத்தை கைப்பற்றியது.
நான்காவது போட்டித்தொடரை 1987 இல் இந்தியா மற்றும் பகிஸ்தான் இணைந்து நடாத்தியது இத்தொடரின் இறுதிபோட்டியில் இங்கிலாந்தை ஏழு ஒட்டங்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து அவுஸ்ரேலிய சம்பியனை கைப்பற்றியது. உலக கிண்ண வரலாற்றில் இதுவே குறைந்த ஒட்ட வித்தியாசத்தில் பெறப்பட்ட வெற்றியாக கருதப்படுகிறது.
1992 இல் நடைபெற்ற போட்டி பல்வேறு ம்ற்றங்களை தாங்கிவந்ததது. அணிகள் கலர் ஆடைகள் அணிந்தமை, பகல்/இரவு போட்டிகள், வெள்ளை நிறப்பந்து பயன்படுத்தப்பட்ட்து. இத்தொடரில் இம்ரான் கானின் வழி நட்த்தலில் வந்த பாகிஸ்தான்  இங்கிலாந்தை தோற்கடித்து சம்பியனை கைப்பற்றியது. இங்கிலாந்து இறுதிதொடரில் தோற்ற மூன்றவது சந்தர்ப்பம் இதுவாகும்.
1996 இல் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை இணைந்து தொடரை நடாத்தியது. அவுஸ்ரேலியாவை வீழ்த்தி இலங்கை கிண்ணத்தை கைப்பற்றியது.
ஏழாவது உலக கிண்ணத்தொடர் மீண்டும் இங்கிலாந்தில் நடைபெற்றது இத்தொடரில் பாகிஸ்தானை தோற்கடித்து அவுஸ்ரேலிய சம்பியனை கைப்பற்றியது. 2003. 2007 உலக கிண்ண போட்டிகளில் முறையே இந்தியா,இலங்கையை வீழ்த்தி தொடர்ந்து மூன்றாவது முறையாக அவுஸ்ரேலியா பட்டம்  வென்றது.

பத்தாவது உலக கிண்ணத்தொடர் இந்தியா, இலங்கை பங்களாதேஷ்ஆகிய நடுகளில் நடைபெற்றது இத்தொடரில் இலங்கையை தோற்கடித்து இந்தியா சம்பியனை கைப்பற்றியது.

2015ம் ஆண்டின் பதினோராவது உலகக் கிண்ணம் அவுஸ்ரேலியா மற்றும் நிவுசிலாந்து ஆகிய நாடுகளில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன இதில் எமது தாய் நாட்டிற்கு  கிண்ணத்தினை  கொண்டுவர எமது வீரர்களுக்காக பிரார்த்திப்போம்.

0 comments:

Post a Comment

 
நாளைய தேசம் © 2013. All Rights Reserved. Design by naalaiyathesham
Top