மே 19, 1925 அமெரிக்காவில் பிறந்த மால்கம் X . இவரின் ஆரம்ப வாலிபம் வன்முறைகள் நிறைந்ததாக இருந்தது. தந்தை கொல்லப்பட்டார். தாய் மனநிலை பாதிக்கப்பட்டார். கல்வி நின்று போனது. போதைப் போதை பொருட்களுக்கு அடிமையானார் சிறை சென்றார் சிறையில் இஸ்லாத்தை விளங்கும் வாய்ப்பு கிட்டியது மிக தீவிரமாக கற்றார் இஸ்லாமிய கொள்கையை ஏற்றுகொண்டார் அதன் அடிப்டையில் தனது வாழ்கையை அமைத்து கொண்ட இவர் நிறவெறியையும் , கருப்பு இனம் மீதான அடக்குமுறைகளையும் , உரிமை மறுப்புகளையும் இஸ்லாத்தை அடிப்டையாக கொண்டு எதிர்த்தார் அமெரிக்காவின் கருப்பு இனம் முழுவதும் இவரின் பின்னால் சென்று விடுமோ என்ற அச்சம் அமெரிக்காவிக்கு ஏற்படும் அளவுக்கு மக்கள் இவர் பின்னால் திரண்டனர்

மார்ட்டின் லூதர் கிங் சாத்வீகமாகப் போராட்டம் நடத்திக்கொண்டிருந்த அதே காலகட்டத்தில்தான் தன் முஷ்டியையும் குரலையும் உயர்த்தி வெள்ளையர்களுக்கு எதிராக ஆவேசத்துடன் போர்ப் பிரகடனம் செய்தார் மால்கம். அமெரிக்காவை உலுக்கிய மிக உக்கிரமான பிரகடனம் அது. மால்கம் நிகழ்த்திய தொடர் யுத்தம் வெள்ளையர்களைக் கிலி கொள்ளச் செய்தது. ஆயிரக்கணக்கான பக்கங்களை மால்கமுக்காக ஒதுக்கி குற்றச்சாட்டுப் பதிவு செய்தது அமெரிக்க உளவுத்துறை. தவிரவும், பகிரங்கமாகப் பல கொலை மிரட்டல்கள்.

‘எச்சரிக்கையுடன் இருங்கள்’ என்று அறிவுரை சொல்லப்பட்டபோது, கத்தியின் வீச்சுபோல் இருந்தது மால்கமின் முழக்கம். ‘ஒரு பெருச்சாளியைப்போல் கட்டிலுக்கு அடியில் நூறு ஆண்டுகள் பதுங்கிக் கிடப்பதற்குப் பதிலாக, சிறுத்தையைப்போல் ஒரு நிமிடம், ஒரே ஒரு நிமிடம் பாய்ந்து வாழ்ந்து உயிரைக் கொடுப்பேன்’. சமீபத்தில் நடக்கும் கொடுமைகளை ஏற்றுக்கொண்டும், நாசுக்கோடும் நடந்து கொள்பவர்கள் மனிதகுலத்தில் கோழைத்தனத்திற்கான உதாரணங்களாக அவர்களின் பெயர்கள் வரலாற்றில் பதிவாகும்’’. என்றார் இந்த மாவீரர்
மால்கமின் பேச்சைப் பார்த்து விடுதலைக்கு போராடிய ஆப்ரிக்க நேஷனல் காங்கிரஸ் மற்றும் பாலுஸ்தீன விடுதலை இயக்கம் அவரை தம் தம் நாடுகளில் பேச அழைத்து அவரை அங்கீரித்த காரணத்தால் அவர் உலகத் தலைவர் வரிசையில் இடம் பிடித்தார்.

மால்கம் எக்ஸ் கொலை செய்ய பலமுறை FBI முயற்சிச் செய்தது இறுதியாக February 21, 1965 (aged 39) ஆம் ஆண்டு தனது புரட்சி கரமான இஸ்லாமிய உரை ஒன்றை நிகழ்த்திக் கொண்டிருக்கும் பொழுது அமெரிக்காவின் அதிகார மையத்தின் நாற்காலியை நடுநடுங்க வைத்த கறுப்பின போராளி மால்கம் எக்ஸ். தோமஸ் ஹாகன் என்பனால் பதினாறு குண்டுகள் பாய மேடையிலேயே அக்கறுப்பின மக்களின் தன்னிகரற்ற தலைவர் கொல்லப்பட்டு ஷஹீத் என்ற அந்தஸ்தை அடைந்து இறைவனிடத்தில் சேர்ந்தார் (இன்னா லில்லாஹி வ இன்னா இலாஹி ராஜிவூன்
சுட்டு கொன்ற தோமஸ் ஹாகன் அண்மையில் சிறையிலிருந்து விடுதலையானான் . ஆனாலும் மால்கம் Xஸின் கொலைக்கு பின்னால் யார் என்ற கேள்விக்கு விடை இன்னும் கிடைக்க வில்லை .



palsuvaivalaippoo.blogspot.com

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
நாளைய தேசம் © 2013. All Rights Reserved. Design by naalaiyathesham
Top