
இலங்கை முஸ்லிம்களின் உரிமைப் போராட்ட வரலாற்றை நோக்கும் போது துருக்கித் தொப்பிப் போராட்டம் முக்கிய வாகிபாகம் பெறுகிறது.1905ம் ஆண்டு மே மாதம் 02ம் நாள் சட்டத்தரணி எம் சீ அப்துல் காதர் அவர்கள் துருக்கித் தொப்பி அணிந்து கொண்டு நீதியரசர் லாய்ட் முன்னிலையில் ஒரு வழக்கில் ஆஜரானார். அப்போது அவர் அவ்வாற…