
1947ம் ஆண்டு ஒக்டோபர் 23ம் திகதி பலஸ்தீனின் ஜாஃபா மற்றும் அஸ்கலான் ஆகிய இரு நகரங்களுக்கு மத்தியில் உள்ள இப்னா என்னும் கிராமத்தில் பிறந்தார் அஷ் ஷஹீத் அப்துல் அஜீஸ் அல் ரன்திஸி. 1948ல் இப்னாவிலிருந்து துரத்தப்பட்டு காஸாவில் அடைக்கலம் புகுந்த குடும்பங்களில் ரன்திஸியின் குடும்பம் ஒன்று. கான் யூனுஸ…