
அல்ஹாஜ் அப்துல் லதீப் அவர்கள் மாத்தறை மாவட்டம் வெலிகாமம் மாதுராகொடையில் தம்பி சாகிப் மத்திச்சம், தாயார் அலீம உம்மா தம்பதியினருக்கு 1900 ஆம் ஆண்டு ஏப்ரில் 09ம் திகதி பிறந்தார்.1910ம் ஆண்டு தனது ஆரம்பக் கல்வியை வெலிகாமம் முஸ்லிம் வித்தியாலயத்தில் மேற்கொண்டார்.முஸ்லிம்கள் கல்வியில் அக்கறையற்றிருந…